உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு "நாகரீக நாட்கள் என நீ கூறுகிறாய் பெண்ணே! இன்றுங்கூட நடையிலே, உடையிலே, நாகரீகத்தைக் காண் கிறோமே தவிர எண்ணத்திலே பழைய விஷம் இருந்த படி. தான் இருக்கிறது. உன்னை வலை போட்டு பிடிக்க விரும்பும். சொகுசுக்கார சங்கரன்கூட நாகரீக நாயகனாக நடிக் கிறானே தவிர உள்ளம் பழய எண்ணம் நிரம்பித்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” -என்று மங்கம்- மாள் கூறினாள். மலர்க்கொடி நகைத்தாள் ! அவள் சிரித்த போதுதான் தெரிந்தது, பற்கள் எப்படி இருந்தாள் பாவையருக்கு அழகு. தரும் என்பது. சிவந்த இரு அதரங்களையும் கொண்டு மலர்க்கொடி- தனது முத்துப் பற்களை மூடி வைத்தாள். உண்மைதானே!" விலையுயர்ந்த வஸ்த்துக்களை சற்று பத்திரமாக வைத்துக் கொண்டுதானே இருக்க வேண்டும். வைர மோதிரத்தை வெல்வெட்டுப் பெட்டியிலும், வரகரிசியை வாசலிலும் போட்டுத்தானே வைப்பார்கள்.