பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3


‘வீரமும் கருணை யும்,வெவ்
வேறென விளம்பா தொன்றிப்
போரெனின் புறங்கொ டாதும்
புகழெனி னறங்கெ டாதும்,
பாரினைப் பரிந்தாய்ந் தாளும்
பண்பின ராட்சி யுற்ற
வூரென’ வொழுகு மாலின்
உளத்தில்நோ யூட்டிற் றப்புல்!

அகக்காழ்கொள் ளாத அந்த
ஆலைப்புல் லொருநா ளண்டி,
முகக்காழ்கொண் டுள்ள மோன
முனிவன்போல் முகம்ம லர்ந்து,
‘சுகக்காழ்கொண் டுள்ள ஆலே!
சுத்தசன் மார்க்கத் தில், ஆன்
மிகக்காழ்கொள் ளாதுள் ளாய்நீ
மேதகு புகழ்மே வாதே!

‘மரம்பற்றி மறைந்தாங் குள்ள
மாபெரும் சீவான் மாவும்
உரம்பற்றிக் கொள்ளா தாயின்
உயர்கதி பற்ற’ தென்பர்;
பரம்பற்றித் தவம்செய் தேனும்
பாரிலே பயன்பற் றற்காம்
வரம்பற்றி னன்றி, வாழ்வு
வனப்புற்ற தாகா தன்றே?

தேக்கில் தேவ தாரித்
திறத்தவுன் னினத்தோ ரெல்லாம்
நாக்கிலே நரம்பில் லாமல்
நகைத்தெள்ளக் கண்டேன் நானுன்
நோக்கினி லோர்ந்து கொள்ளும்
நுட்பமும் காணேன்; நோலாப்
போக்கினைப் பார்த்தென் னுள்ளம்
பொங்கிற்’றென் றுரைத்த தாம்புல்!