உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

14

தலையாலே கமழப் பூத்துத் தனிப்புக ழெய்தும் முல்லை ! இலையாலே கமழச் செய்திங் கெழில்துளா யேற்ற மெய்தும் ! சிலையாலே எழிலைப் பெற்றென் சிந்தை நோய் செய்யும் செல்வீ ! விலையாலே யெய்தற் கேலா வித்தையிக் கவிதை யொன்றே !

வெண்மைகொண் டிருந்தியற்கை
விளைவினை விரும்பி யாய்ந்தவ்
வுண்மைகொண் டுன்னு முள்ளம், ஒழிவிலாக் கல்வி, கேள்வி ; திண்மைகொண் டச்சம் தீர்ந்தித் தேசத்தின் மீதிற் பாச வண்மைகொண்டுள்ளோர்வாயில்
வழங்குஞ்சொல்கவிதை,"யென்றேன்.