உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18


‘வெள்ளாட்டின் விழியிட் டேரி
வேலிமே’ லெனவி ழைந்து
கள்ளீட்டிக் கருத்த ழிந்த
கருவண்டாய்க் கழித்துக் காலம்,
உள்ளூட்டு முண்மை , யூக்கம்,
உறுதிக ளனைத்தும், செக்கில்
‘எள்ளாட்டி யெறிந்த பிண்ணக்’
கெனஇழந் திருக்கின் றய்நீ!

நீருணு மேரிக் குள்நந்
நிறமுணு மாம்பல், வானில்
பூரண மதியைப் போற்றிப்
புளகித முணல்போல், நானிங்
கூருணு முண்மை கண்டோர்ந்
துரிமையா யுரைப்ப தொன்றே
காரணம் காதற் காயின்,
களிப்பவ னவேன் பொன்ன!

இகல்செய இணைந்திவ் வானில்
ஏகமா யிடித்து, மின்னும்
முகில்செயும் முரணைக் கண்டும்,
முகம்மலர்ந் துவந்து முன்னய்ப்
பகல்செயும் பருதி வேட்கை
பங்கயம் பரிந்து தீர்க்கும்,
நகல்செயத் தழுவி நாளும்
நாணத்தை விட்டு நன்றய்!

வயலொடு தோட்டம் தோப்பே
வாழ்வுக்குப் போதும்; வாய்மைச்
செயலொடு தேச பக்திச்
சிந்தனை வேண்டா மென்றே
துயிலொடு துய்மை நீத்துத்
துார்த்தனய்த் திரிவாய்! துாய
கயலடுங் கண்ண ருன்னைக்
கனன்றுகாய்ந் தெரிப்பா” ரென்றேன்.