பக்கம்:பரிசு மழை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர் ரா. சீனிவாசன் ஆள் தேவை; கொள்ளி போடப்புள்ளை என்றாலும் அள்ளி எடுக்க ஓர் அருந்ததி தேவை” என்பதை அறிவித்தார். அவர் சொந்தத்தில் ஒரு பெண் முப்பத்தி ஐந்தைக் கடந்து விட்டாள்; அவள் கடக்கவில்லை. அது கடந்து விட்டது. அவள் அவருக்குத் தேவைப்பட்டாள்; அவள் ஒரு வேளை சோற்றுக்கே தாளம் போடுவதாக இசை ஞானிகள் கூறி வந்தனர். அவளுக்குத் தங்கைகள் இருவர். இவளால் தடைபட்டுக் கிடந்தனர். அப்பா எந்த வேலையும் இல்லாமல் வேட்டி கட்டிக் கொண்டு திரிந்தார். எப்பொழுதும் சலவை வேட்டிதான் அவர் கட்டுவது. மானமுள்ள குடும்பம்; மற்றவர்களைக் கையேந்தி நிற்க மாட்டார்கள், மானம் அது கெடுவதற்கு முன் அணை போட வேண்டியுள்ளது. மூத்தவளைக் கட்டிக் கொடுத்து விட்டால் மற்றவர்களைக் கரை ஏற்ற முடியும்; ஒருவரைத் தள்ளி மற்றவர்களைக் காப்பாற்றலாம் என்று முடிவுக்கு வந்தனர். "அநியாயமாக அவளைப் பலி கொடுப்பது தவறு" என்று நியாயம் அறிந்தவர்கள் அழகாகப் பேசினார்கள். தீர்ப்புகளை வழங்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை, அபிப்பிராயங்கள் கூற யாருக்கும் உரிமை உள்ளது. அவளைக் கேட்டார்கள்; அவள் அவரை மணப்பதற்கு முழுச் சம்மதம் என்று தெரிவித்தாள். யோசித்துத்தான் சொல்கிறாயா? அந்தச் சிவகாமி சிதம்பரனாரை மணக்க இசைவு தந்தாள். “மணம் என்பது சிறந்த சேவையாகக் கொள்கிறேன்; அவருடைய மனைவி இறந்துவிட்டாள்; குழந்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/38&oldid=806874" இலிருந்து மீள்விக்கப்பட்டது