பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புலியூர்க்கேசின்_ரிபாடற்பகுதிகள் கிேட 235 சொற்பொருள் : வெருவரு- அஞ்சத்தக்க கொல் யானை பொருகளத்துப் பகைவன்ரத் தவறாதே கொல்லும் யானை. வீங்குதல் - பூரித்துப் பருத்தல்; பாண்டியன் தன் வலியும் படைவலியும் கொண்டவன் என்பதாம். உரு நிறம் கூடலவர் கூட்ல் நகரத்துள்ள அவனது உரிமைச் சுற்றத்தினர்; நகர மாந்தரும் ஆம். பொருவுங்கால் ஒப்பாகக் கூறுமிடத்து. இரு பெரிய கரிய. முந்நீர் - கடல். வையம் - உலகம் மா - யானை, வெள்ளையானை, வானாறு - ஆகாய கங்கை, விளக்கம் : வையையாற்றுப் புதுப்புனலின் சிறப்பைக் கூறினும், இது தலைவன் தலைவியை மறந்தானாகச் சென்று பரத்தையிரோடு நீராடிக்களித்த செயலைப் பழித்ததேயாகும். இதனால் தோழி, தான் தல்ைவனுக்கு உதவ மறுத்தனள் என்க. ' மூன்றாம் பாடல் வையை அறவோர் உள்ளார் அருமறை காப்ப 率 - :: 非 செறுநர் விழையாச் செறிந்தநம் கேண்மை மறுமுறை யானும் இயைக நெறிமாண்ட தண்வரல் வையை எமக்கு. அறநெறியினராகிய சான்றோர்கள் தாம் பிழைத்தொழு - குவதற்கு ஒருபோதும் எண்ணமாட்டார்கள். அரியதான மறை களிலே சொல்லப்பட்டுள்ள நெறிகளைக் காத்து வருவார்கள். பகைவரும் ஊறுசெய்வதற்கு விரும்பாத செறிந்த நட்பு நம்மிருவரது நட்பும் ஆகும். இம்முறைதான் அது எமக்குப் பொருந்தாது. போயிற்று. செல்லும் நெறியாலே மாட்சியுடைய குளிர்ந்த வரத்தையுடைய வையையாறே, அதுதான் எமக்கு மறுமுறையேனும் பொருந்துவதாக, அதற்கு நீயும் அருள்வாயாக! சொற்பொருள் : செறுநர் - பகைவர். நெறி செல்லும் வழி. தண்வரல் - குளிர்ந்த நீர்வரத்து. * . குறிப்பு : இப்பகுதி தொல்காப்பியச் செய்யுளியல் 12 ஆம் சூத்திரவுரையுள் பேராசிரியராற் காட்டப்பெற்றது. - நான்காம் பாடல் மண்ணார்ந்து இசைக்கும் முழவொடு கொண்டதோள் கண்ணாது உடன்வீழும் காரிகை கண்டோர்க்குத் தம்மோடு நிற்குமோ நெஞ்சு! -