பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திருமால் வாழ்த்து (3), - 35 சிவந்த ಹ6ಹGr® கூடிய கரிய திருமேனியை உடை யோனே (வசுதேவன்); கரிய கண்களுடன் கூடிய வெண் மேனியனே. (சங்கருடணன், பொன்னிறக் கண்களையுடைய பச்சைமேனியன்ே (பிரத்தியும்நன்) பசிய் கண்களை உடைய திருமாலே (அநிருத்தன்) இடமாகவும் வலமாகவும் நின்று கூத்தாடும் கூத்தனே! குடக்கூத்தில் வல்லவனே கோக்களைக் காத்தலில் சிறந்தோனே! அனைத்துயிரையும் காப்பவனே! யாவராலும் தம் முயற்சிகளாற். காணவியலாத மரபினை உடையோனே! அன்பர் உள்ளத்துள் நீங்கா நினைவாக நிற்பவனே! அழிவற்ற மன்னனே! உலகை யாள்கின்ற மன்னவனே! தொன்மை இயல்புகளை அறிந்தோனே! நல்ல முறையில் யாழிசைக்கும் யாழிசைப் பாணனே துளசி மால்ை அணிந்த செல்வனே தோல்வியறியாத சங்கினை உடையவனே! பொன்னாலியன்ற ஆடையினையும், வலம்புரிச் சங்கையொத்த வண்ணத்தையும் கொண்டவனே! வலக்கையிற் சக்கரத்தை ஏந்தியிருப்பவனே! மற்போரில் வல்ல ஆற்றலுடைய வனே! திருமகளின் மணாளனே பேராற்றலையுடைய மள்ளனே! சொற்பொருள் : குடவல - குட + அல எனப் பகுத்துக் குடக்கூத்து ஆடுதற்குரிய குடத்தையும், பகைவரை அழித்தற்கான கலப்பைப் படையினையும் உடையோனே எனவும் கொள்வர். - நேமி நிழல் மாநிலம் இயல் முதன்முறை அமயத்து நாம வெள்ள நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டுநின் நேமி நிழலே - ஆதி நாளிலே, இப் பெருநிலமானது வெளிப்பட்டுத் தோன்றாத அக் காலத்திலே, அச்சமுடைய ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவாகத் தோன்றிய சத்தியரூபனாகிய நின் மகனாகிய பிரமனோடு, மலர்ந்த தாமரை மலரினை உந்தியிடத்தே தோற்றுவித்த பெருமானே! நின் சக்கரப்படையின் நிழலே இவ்வுலகுக்கும், எமக்கும் காவலாக என்றென்றைக்கும் விளங்குமாக! | - சொற்பொருள் : மாநிலம் - பெரிதான நிலப்பரப்பு. நாம வெள்ளம். அச்சந்தரும் ஊழிப் பெருவெள்ளம் வாய்மொழி மகன் - வேதனாகிய பிரமன். - விளக்கம் : காத்தற் கடவுள் திருமால் அவனுடைய படையாக அமைந்தது சக்கரம், ஆகவே, அதனுடைய நிழலிலே தான் அனைத்துலகமும் நின்று நிலைபெறுகின்றது என்பதாம்: அவனே அனைத்துமாகியவன் என்பதுமாம். | - | |