பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ുകേട് * செவ்வேள் (9) 91 குடிகொண்டருளும் செல்வனாகிய முருகப்பெருமானின் காவல மைந்த திருக்கோயிலிடத்தே விருப்புடன் சென்று வழிபட்டனர். இவ்வாறு தன்னடியவர் விரும்பி வந்து வழிபட்டுப் போற்றக், கறைமிடற் றண்ணலாகிய சிவபெருமானுக்கு, மாசற் றோளான உமாதேவியார் பெற்றுத்தந்த செல்வனாகிய முருகப் பெருமானின் கோயில் விளங்குவதாகும். நெறிப்படச் செல்லும் அருவி நீரும், ஊற்று நீருமாகிய நீர் வளம், தரை வெடிப்புற மழை பெய்தலற்று வறண்டு போயின காலத்தும், தண்ணிய திருப்பரங்குன்றமே, நின்னிடத்து என்றும் நிலைபெற்று நின்று, நினக்குச் சிறப்பைத் தருவதாக! - சொற்பொருள் அமிர்தம் முதலது வாயூறல், பின்னது அமுதம், உய்ப்ப செலுத்த செல்லல் - துன்பம் மறு மிடற்று அண்ணல் கழுத்திற் கறையுடைய அண்ணலாகிய சிவன். மாசிலோள் - குற்றமிலாள் உமையம்மை அசும்பு - ஊற்று நீர். விளக்கம் : இவ்வாறு, பலரும் வந்து பெருமானைப் போற்றித் தத்தம் துயர்தீர்ந்து இன்புறுதற்கு உதவியாகப் பெருமானின் இருப்பிடமாக அமைந்து விளங்கும் திருப்பரங் குன்றமே! நீயும் நீர்வளித்திற் குறையாது என்றும் தண்பரங் குன்றமாகவே விளங்குக என்கின்றார். இது பாடியோரின் வாழ்த்துரை: தமிழ் நன்மக்களின் உள்ளார்ந்த விருப்பும் ஆகும். - ஒன்பதாம் பாடல் செவ்வேள்இ ) - பாடியவர் : நல்லந்துவனார்: பண் வகுத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்; பண் : பாலையாழ். - முருகப் பெருமான் வள்ளி நாயகியைக் காதலித்து மணந்து கொண்டான். இதனை அறிந்ததும் தெய்வானை அம்மைக்குச் சினம் ஒருபுறமும், அழுகை ஒரு புறமுமாக எழுந்து வருத்திற்று. இதன் தொடர்பான பல செய்திகளைச்சுவைபடக் கூறுகின்றனர் ஆசிரியர். - கண்மழையும் வான்மழையும் - இருநிலம் துளங்காமை வடவலன் நிவந்தோங்கி அருநிலை உயர்தெய்வத் தணங்குசால் தலைகாக்கும் உருமுச்சூழ் சேட்சிமை உயர்ந்தவர் உடம்பட எரிமலர்த் தாமரை பிறைவீழ்ந்த பெருவாரி - விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர் மலரேய்ப்பத் 5 தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி - மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய்! நீ மையிருநூற் றிமையுண்கண் மான்மறிதோள் மணந்த - , . ஞான்று. ہیھ=