உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

93

சனவரி 1927ஆம் ஆண்டு முதல் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றது. செங்குந்தரின் நோக்கங்கள், அவர்தம் கருத்துகள், செங்குந்த மக்களது அறிவு ஆற்றல் கொடை புகழ் வழக்கம் ஒழுக்கம் முதலியனவும் வெளிவந்துள்ளன. மேலும் செங்குந்தர் பிரபந்தத் தொகுதியுள் வரும் அரிய நூல்களை விருத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்வது, கல்வி தொழில் வாணிகம் விவசாயம் தேசியம் கல்வெட்டு செப்பேடு முதலியவற்றில் செங்குந்தர் தொடர்பாக உள்ள செய்திகளை ஆராய்வது, 'நமது கூட்டத்தினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை' என்ற தலைப்பின் கீழ் கூட்டத்தினரின் வளர்ச்சிப் பாதைக்கான வழிகளை ஆராய்வது. இதுவரை வெளிப்படாத மிக்குயர்ந்த தமிழ் நூல்களை நூதன முறையில் பதிப்பித்தல் போன்றன இவ்விதழில் வெளிவந்துள்ளன.

இச்சங்கத்தின் சுவடிப்பதிப்பாக 'செங்குந்தர் பிரபந்தத் திரட்டு' எனும் நூல் தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஒட்டக்கூத்தரின் ஈட்டியெழுபது, எழுப்பெழுபது, புகழேந்திப் புலவரின் திருக்கைவழக்கம் உள்ளிட்ட பன்னிரண்டு பிரபந்தங்கள் இடம்பெற்றுள்ளன.

செங்குந்தமித்திரன் இதழில் 'இரட்டையர் அம்மானை' எனும் சுவடிப்பதிப்பு வெளிவந்துள்ளது.

சித்தாந்தம் (1928)

'சித்தாந்தம்' எனும் திங்களிதழ் ம. பாலசுப்பிரமணிய முதலியாரை ஆசிரியராகக் கொண்டு சென்னை சைவசித்தாந்த மகாசமாஜத்தின் வெளியீடாக 1928ஆம் ஆண்டு சனவரி முதல் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. 1912இல் வெளிவந்த சித்தாந்தம் இதழினின்றும் இது வேறானது. சித்தாந்தம் 1928 முதல் 1933 வரையிலான ஆறு மலர்கள் A4 அளவிலும், 1934 முதல் 1972 வரையிலான 39 மலர்கள் கிரௌன் அளவிலும், 1973 முதல் திம்மி அளவிலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றது.