பக்கம்:பருவ மழை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டிருப்பாய் நீயுமிங்கு வரும்போ தெல்லாம் கலாபமயில் போன்றவளேக், கல்வி கேள்விப் பண்டிதையைப் பாட்டிசைக்குங் குயிலை; அந்தப் பைக்தொடியோர் பெண்தான்.அவ் வீட்டா ருக்கு. ஒருபெண்ணே ஆதலினல் அவளின் நன்மை ஒன்றேதான் தமக்கின்பம் எனத் தாய் தந்தை கருதியவள் விரும்பும் அணி பணிஆ டைக்கும் கல்விக்கும் இசையொடுயாழ்க் கற்ப தற்கும் வருமானம் யாவையுமே வாரித் தந்தார் மணப்பருவம் எய்தினள்பெண் மாப்பிள் அளக்குப் பெரும்நிதியை விலைகொடுத்துப் பிடித்தார் கண்டோர் பெண்ணுக்கு ஏற்றவரன் இவனே என்ருர்! திருவோலை உறவினர்க்கும் ஊரா ருக்கும் தெரிந்தவர்கள் தமக்கெல்லாம் அனுப்பி வைத்தார் தெருவெல்லாம் பந்தலிட்டு அழகு செய்தார் சேய்மணத்தை எண்ணிஎண்ணி மனம்பூ ரித்தார் வருவோர்கள் யாவரையும், மணமாப் பிள்ளை வகையினர்கள் யாவரையும் வரவேற் ருர்கள், திருமணத்தின் முதல்நாளே மாப்பிள் அளக்குத் தேகமெல்லாம் குத்தல்ஜுரம் தலைகோ யென்ருர், 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/110&oldid=807224" இலிருந்து மீள்விக்கப்பட்டது