பக்கம்:பருவ மழை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X கலைஞர்கள், கவிஞர்கள் மறைவும் அவல அலைகளாகக்" கவிஞரின் நெஞ்சில் அலைமோதுகின்றன. பன்மணித் திர ளாகக் கீழுள்ளவற்றையொத்த பல அரிய மணிகள் ஒளி வீசுகின்றன. ஒற்றுமை யெனும் பண்பாட்டை உறுதியாய்க் கடைப்பிடிக்கின் வெற்றியும் புகழும் வாழ்வில் விளைந்திடும்; மகிழ்ச்சி பொங்கும் (பக். 247) மனநிறைவே மானுடத்தின் முழுமையான வாழ்க்கை (பக்.250) பாருக்குப் படியளக்கும் பரமன்-உழவனே (பக்.287) மனிதனைப் புனிதனுய் மாற்றும்-கெட்ட மனத்தின் இருள்நீக்கி மாண்பை உண்டாக்கும் -அறிவாலயம் நூலகம்(பக். 269) ‘வாழ்த்துக்கள்' என்ற பகுதியில் கவிஞர் தன்னைக் கவர்ந்த தலைவர்களையும் கலைஞர்களையும் உளம்குளிர வாழ்த்து கின்ருர், மரபுக் கவிதை : எழுத்தசைகள் சீர்தளைகள் அடிதொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும்; அப்பால் ஈரைம் பொருத்தமொடு மதுரமாய்ப் பளபளப் பிணியசொற் கமையவேண்டும் அழுத்தமிகு குறளினுக் கொப்பாக வேபொருள் அடக்கமும் இருக்க வேண்டும் அன்பான பாவினம் இசைந்துவரல் வேண்டும்முன் அலங்காரம் உற்றதுறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/12&oldid=807234" இலிருந்து மீள்விக்கப்பட்டது