பக்கம்:பருவ மழை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேருதித்த நன்ைைளக் குழந்தை கள்தம் நிகரற்ற திருநாளாய் நெடுநா ளாகச் சீருடனே கொண்டாடி வருவ தற்குச் சிறப்பான காரணம் இச் சிறுவர் நாளே பாரதத்தின் வருங்காலப் பெரியோ ராகிப் பண்பாட்டின் பெருமைகளைக் காத்தி டத்தான்! இன்றிந்தக் கவியரங்கில் எனக்குத் தந்த இனிதான தலைப்பு-பணம் என்ப தாகும் என்றைக்கும் கவிஞரினம் மதித்தி டாத இப்பணமும் எங்களிடம் இருப்ப தில்லை! குன்றைப் போல் பணம் ஒர்பால்-கொள்கை ஒர்பால் குவித்துவைத்து எதுவேண்டும் என்று கேட்டால் ஒன்றைத்தான் பற்றிடுவோம் பணத்தை யல்ல! உண்மை! அத ல்ைஎமக்குக் கவலை யில்லை! வட்டிக்கு வட்டிவாங்கிப் பணத்தைச சேர்த்து வகையாக வாழ்வதற்குத் திட்டம் தீட்டச் செட்டிக்குத் தான் தெரியும் சுரதா செட்டி! சிக்கனம் எனும்தலைப்பு மிகப்பொருத்தம்! துட்டுக்கும் வகையற்ற எனக்கும், அண்ணுர் துரைக்கண்ண ருைக்கும் கொஞ்சம் கூடக் கட்டோடு பொருத்தமில்லாத் தலைப்பைத் தந்தார்! கவிஞரென்ற காரணத்தால் ஏற்றுக் கொண்டோம்! 106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/121&oldid=807236" இலிருந்து மீள்விக்கப்பட்டது