பக்கம்:பருவ மழை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டரவக் கொடி யோன் அவை.தன்னில் பாண்டவர் தங்களைச் சூதினுல்-வெற்றி கொண்டுவிட்டோ மெனும் ஆணவம்-மிஞ்சி கோதையைப் பாஞ்சாலன் செல்வியைப்.பலர் கண்டுககைக்கத் துகிலினைப்-பற்றிக் களைய நினைத்தக் கயமைபோல்-புகழ் மண்டிடும் பாரத நாட்டினை.நீச்ச வசைகள் மொழிந்தனன் பேடியன்! உலக அமைதியைக் காக்கவும்-மக்கள் ஒற்றுமைப் பண்பை வளர்க்கவும்-மூளும் கலக நிலைகள் தவிர்க்கவும்.பாது காக்கும் அறங்கள் தழைக்கவும்.நீதி கிலேய மென வைத்த மன்றத்தை-கல்ல நேர்மையில்லாத வல்லரசுகள். அங்கு விலைகொண்டோர் சகுனியை வைப்பதோ? -ஊதாண்ட் விளையாட்டை வையம் சகிப்பதோ? ஆண்டு பல்லாண்டு முயன்று நாம்-அன்று ஆங்கிலர் சூழ்ச்சி அனைத்தையும்-வென்று மீண்ட சுதந்திரம் தன்னிலே.இந்த வீணர்க்கும் பங்கு கொடுத்தனம்-நம்மை வேண்டியே பெற்ற அப் பிச்சையை-இன்று வீணே தொலைத்திடும் இச்சையால்-யுத்தத் துரண்டிலில் மாட்டித் துடித்தனன். அந்தத் தோல்வியால் ஏதோ பிதற்றினன்!

  • 23
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/137&oldid=807261" இலிருந்து மீள்விக்கப்பட்டது