பக்கம்:பருவ மழை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயத்தில் தொடர்ந்தநெடும் பயணம் வெற்றி எங்கெங்கும் எதிரொலிக்க முரசம் ஆர்த்துக் குமரிக்கு வந்திடுங்கால்-சேது மன்னர் கோதறுமெய் ஞானவள்ளல் தமையடுத்து அமெரிக்க காட்டில்உலகெங்கும் உள்ள ஆத்மீக ஞானியர்கள் ஒன்று கூடும் சமயப்பேர் அரங்கினிலே கலந்து; இந்து தருமத்தை நிலைகாட்டக் கேட்டுக் கொண்டார். ஆரணமெய் ஞானமெல்லாம் உணர்த்தும் சீலர் அனைத்துமதத் தத்துவமும் உணர்ந்தமே லோர் மேருவைப் போல் கெடிதுயர்ந்து விம்மும் தோளர்! மேலமொழி ஆங்கிலச்சொற் பொழிவில் வல்லார்! வாரணம்போல் அவைகடுவே சி றப்புற் ருேங்கும் வரைகடந்த கல்விகலம் வாய்க்கப் பெற்றேர் பாரனைத்தும் இந்துமதப் பெருமை சாற்றும் பணியேற்றுச் சிக்காக்கோ நகரம் சேர்ந்தார்! தக்கார்கள் பலர்கூடி உலகிலுள்ள சமயங்கள் அத்தனைக்கும் விளக்கம்கூறி எக்காலும் எல்லோரும் ஏற்கத் தக்க(து) எம்மதமே இவ்வுலகில் சிறந்த தென்று வக்க2ணகள் பேசிகின் ருர் கரிக்கூட்டத்தில் வசிப்புலிபோல் கிளர்ந்தெழுந்த வங்கச் சிங்கம் மிக்காரும், ஒப்பாரும் இல்லை யென்று வியப்புறவே வேதாந்த விளக்கம் தந்தார் 10. 153.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/167&oldid=807333" இலிருந்து மீள்விக்கப்பட்டது