பக்கம்:பருவ மழை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னிதனைக் கனியெனவே மாற்றிச் சொன்னச் கலகமுனி காரதனின் உரையைக் கேட்டுத் தன்னை மறந்தே குறப்பெண் தாகம் மீறித் தையலவள் காவல் செய்யும் புனத்தில் வேடன் தன்னுருவம் தாங்கிஒரு மானைத் தேடித் தடுமாறி இங்குவந்தேன், நீயே அம்மான்! இன்னமுதே' எனஏற்றுக் கொள்ளா விட்டால் இன்னுயிர்யான் தரியேன்என் றிரஞ்சி கின்ருன்! மலைக்குறப்பெண் வள்ளி கல்லாள் மயக்கம் கொண்டு மாருட்டம் போடுகின்ற வனத்து வேடன் தலைக்கிறுக்கை அடக்குதற்குக் குரல் எடுத்துத் தந்தையொடு தமையர்களை அழைத்தாள்! வந்தார்! அலைக்கழித்த வேடன் எங்கோ மறைந்தான்! ஆங்கே அழகியதோர் வேங்கைமரம் கிற்கக் கண்டார்! தொலைத்தழித்து வெட்டிவிடத் துணிந்தார் தந்தை! துடியிடையாள் தடுத்து விட்டாள் வந்தோர் சென்ருர்! மீட்டுமங்கே வேடன் வரக் கண்டாள்! கின்ற வேங்கைமரம் மறைந்துவிடக் கண்டாள்! விந்தை காட்டுகின்ற கந்தனுக்கோ களிப்பு உள்ளம் கலங்கி நிற்கும் காரிகைக்கோ திகைப்பு! காதல் வேட்கை யுற்று மலர்தழுவும் வண்டைப் போலே வேடிக்கை காட்டியின்ருன்! சினந்தே வள்ளி ஆட்களைகான் அழைத்திடுவேன் என்ருள்! வேடன் அதிர்ந்தவன்போல் பயந்துகெளிக் தகன்றே போனுன்! 203

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/216&oldid=807508" இலிருந்து மீள்விக்கப்பட்டது