பக்கம்:பருவ மழை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணமே எதிர்த்து வந்து மருட்டிடும் போதும்; வாழ்வைத் திரணமாய் மதித் தெதிர்க்கும் திடமனம் கொண்ட எந்தன் கரணமும் உயிரும் மெய்யும் கரைந்தணு அணுவாய்ச் சேர்ந்து திரவமாய்க் கண்ணி ராகச் சிந்திட வைத்தாய் ஐயா கவமணித் தொகுப்பாய் இந்த காட்டிற்கு உரிய சொத்தாய்க் கவிதையில் யாத்து வைத்த கற்பனைக் கருவூ லத்தை அவலமாய் கெருப் பிலிட்டு அழித்திட்ட வெறியனைப் போல் தவமணி உனது வாழ்வைத் . தகர்த் தென்னைத் தவிக்க வைத்தார்! ஆவலாய் இைறவனுக் கோர் ஆலயம் அமைத்து, ஆங்கத் தேவனைக் கொலுவ மர்த்தித் தெரிசிக்கு முன்னே, எந்தப் பாவியோ அதை இடித்துப் பாழாக்கித் தகர்த்ததைப் போல் ஆவியை நிகர்த்த உன்னை அழித்தனர்; அதிே யன்ருே? 225

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/237&oldid=807531" இலிருந்து மீள்விக்கப்பட்டது