பக்கம்:பருவ மழை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றுமை வலிமை சேர்க்கும்! முத்தமிழ் உயர்வுகண்ட முதன்மொழி தமிழேஎன்ருேம் முத்தமிழ் சங்கம்கண்ட முதலினம் நாமே என்ருேம்! முத்தமிழ் நாடும்,வேந்தும் முறைமையில் ஆண்ட தென்ருேம்! அத்தனை பெருமையும் இன்(று) அவலமாய்ப் போன தென்கொல்? கங்கையை இமயம்தன்னைக் கடாரத்தைச் சாவகத்தை சிங்களம் புட்பகத்தைச் சிங்கையைக் காழகத்தை வங்கத்தை அரப்பாவோடுமொகஞ்சோதா ராவை வென்று தங்கள்விற் புலிமீன் கொண்ட தமிழ்க்கொடி பறந்த தெங்கே? உலகிடை நாகரீக உயர்ச்சியும் முதிர்ச்சியுங் கொண்(டு) இலங்கிய தமிழினத்தின் இன்றைய நிலைமை என்ன? பலப்பலப் பேசியென்ன? பழம்புகழ் மீள்வ தென்ள்ை? கலகத்தி முட்டுகின்றக் கருங்காலித் தமிழன் உண்டே 243

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/253&oldid=807568" இலிருந்து மீள்விக்கப்பட்டது