பக்கம்:பருவ மழை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுவேதான் இன்று இந்த இனிய கவியரங்கில் பொதுவாக நான் வழங்கும் புனிதக் கருத்தாகும்! தொடக்கவுரையாய்ச் சிலசொல் சொன்னேன்; இனியிங்கே, கடக்கும் கவியரங்கை நானும் சுவைத் திடுவேன் என் இனிய அண்ணன்! எழுத்துலகின் முன்னேடி! பன்னெடுநாள் தேசியப் பாசறையில் பயிற்சி பெற்றேர்' நாரணது ரைக் கண்ணன் நற்றலைமைப் பணியேற்றுப் பூரணமாய்க் கவியரங்கைப் பொலிவுபெற நடத்தி வைப்பார் பத்துக் கவிஞரிங்கே பாடுதற்கு வந்துள்ளார்! சொத்தைக் கவிஞரல்ல, சோடைக் கவிஞரல்ல! சத்துக்களைப் பிழிந்து சாருய் வடித்து யர்ந்த முத்துக் கவிதைகளாய் மொழிவார்கள்; கேட்டுவப் போம்! (19-1-75 கோகலே மண்டபத்தில் தேசிய இளைஞர் பேரவை' நடத்திய உழவர் விழாக் கவியரங்கத் தொடக்க வுரை.) - 259

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/269&oldid=807670" இலிருந்து மீள்விக்கப்பட்டது