பக்கம்:பருவ மழை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சி நாள்! எழுச்சி நாள்-புரட்சி நாள்-தமிழன் இதயக் குமுறல் தன்னை எங்கும் எதிரொலிக்கும் இந்த நாள்- (எழுச்சி) பழித்தவர் ஒடுங்கவும் பகைத்தவர் நடுங்கவும் விழிப்படைந்த தமிழர் கூட்டம் வீறுகொண் டெழுந்த நாள்- (எழுச்சி) மாநிலத்தின் செல்வம் முற்றும் மத்தியில் குவிப்பதோ வளமைகுன்றி வறுமைமிஞ்சி மாநிலம்தவிப்பதோ. என்றும் மானியங்கள் வேண்டி வேண்டி மண்டியிட்டு நிற்பதோ வட்டிக்குக் கடன் கொடுத்துக் கிட்டி போட்டுக் கேட்பதோ (எழுச்சி) சேலம் மாவட்டத்திலே திரண்டிருக்கும் செல்வமாம் தேனிரும்புக் கனியெடுத்துத் தேவையான கைத் தொழில் சாலையொன்று அமைப்பதற்குத் திட்டமிட்ட உறுதியை சமயம்போல மாற்ற எண்ணும் சதிகளைத் தகர்க்கவே (எழுச்சி) 264

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/274&oldid=807682" இலிருந்து மீள்விக்கப்பட்டது