பக்கம்:பருவ மழை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்திசையும் எழுச்சிமிக்கக் கிளர்ச்சி வேண்டும்! எதிர்ப்பெல்லாம் பொடிப்பொடியாய்த் தகர்க்க வேண்டும்! சத்தியமே நிச்சயமாய் வெற்றி கொள்ளும்! தர்மமே என்றைக்கும் நிலைத்து நிற்கும்! வேதகாலம் தொடங்கி இன்பத் தமிழை மாய்க்க, வெறிபிடித்த சுயநலச்சூ தாட்டக் காரர் மோதலினைத் தொடங்கியபோ தெல்லாம் முன்னேர் முனைந்தெதிர்த்துச் சதியைமுறியடித்தார்! இன்றக் காதகரின் சூழ்ச்சிக்குக் கைகொடுக்கக் கருங்காலித் தமிழர்சிலர் துணைபோ கின்ருர்! சோதனையில் தோற்றுவிட்டால் தமிழர் வாழ்வே சூனியமாம்; தூங்காதே! எச்சரிக்கை: 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/36&oldid=807752" இலிருந்து மீள்விக்கப்பட்டது