பக்கம்:பருவ மழை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிசை 、ヘ.へヘたヘヘヘヘヘヘノハ ヘ v 、” - ヘベゞ・下ヘベてい * ヘヘヘ・ヘ・N. உலகினிலே,மனிதர்குலம் உதித்த நாள்தொட்(டு) உயர்தமிழும் உதித்ததெனும் உண்மை தன்னைப் பலகாட்டு அறிஞர்களும் புகழ்ந்து கூறிப் பைந்தமிழின் இனிமைகயம் செறியும் நூல்செய்ப் புலவர்களின் திறமைகண்டு வியந்து வந்து, புதியபிற மொழிகளிலும் புகுத்தி யேகுங் கலைக்கடலாம்'தமிழ்'இசைக்குப் பொருந்தா தென்ருல், கண்ணற்ற வாதமிதைக் கேட்போர் யாரே? வண்டுதுளை மூங்கிலிலே வசந்தம் மோத வரும்இனிய ஒலியினிலே குழலைக் கண்டான்! பெண்டுபிள்ளை வாழஅவன் விலங்கைக் கொன்று, பெயர்த்தெடுத்த தோலுலர்த்திப் பதம்செய்யுங்கால் விண்டுமரத் துண்டுகள்வீழ் முழக்கம் கேட்டு வெற்றிதரும் போர்முரசும் முழவும் கண்டான்! பண்டுவில்லின் காணுெலியில் யாழைக் கண்டான்! பைந்தமிழன் சான்றிதற்குப் பன்னூ லுண்டு! 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/41&oldid=807758" இலிருந்து மீள்விக்கப்பட்டது