பக்கம்:பருவ மழை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு கூறும் சிறந்த மண்டிலம் எது? SAMAMMMMMAMA AMMM MMMMMMMMS SMMMMMMSMMMMMMSMSMSMMSMMSMSMSMSMSMS அன்பார் தமிழினத்தின் அறிஞர் திருச்சபையில் இன்பத் தமிழ்க்கவிதை இசைக்கும் கவியரங்கின் தலைமைப் பணிபூணும் தகுதி எனக்களித்த கலைத்தாய் தமிழணங்கின் கழலடிக்கு என் வணக்கம்! சொல்லித் தொடங்குகின்றேன் தூயதமிழ்ப் பணிக்கு வல்லமைகள் தந்திடுவாள் வண்டமிழ்த் தாய் எந்தனுக்கு என்னுந் துணிவோடு இளங்கோ விழாவினிலே சின்னஞ் சிறியேனும் சேர்ந்திட்டேன்! ஆலுைம்; தென்பாண்டி மன்னரெல்லாம் செந்தமிழ்க்குச் சங்கம்வைத்து முன்பாண்ட வண்ணமெல்லாம் முழுதும் நினைக்கின்றேன்! அன்றெழுந்த நன்முயற்சி அழிந்தொழிந்து போகாமல் இன்றும் எழுச்சியுடன் இயங்குவதைக் காணுகின்றேன்! செட்டிநாட் டார்வாழும் சிற்றுார்கள் அத்தனையும் திட்டமிட்டுத் தமிழ் வளர்க்கும் திறத்தை வியக்கின்றேன் கன்னித் தமிழ் வளர்க்கும் காரைக்குடி நகரோர் எண்ணத்தை நான் வாழ்த்தி இதயம்களிக்கின்றேன். சைவநெறி பேசித் தண்டார் தமிழ்மாரிப் 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/53&oldid=807772" இலிருந்து மீள்விக்கப்பட்டது