பக்கம்:பர்மா ரமணி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுமணி * 107 என்று ஆனந்தனிடம் உற்சாகமாகக் கூறிஞன் குண்டு ஆனந்தனும், குண்டுமணியும் எப்போதுமே ஊர். சுற்றிகள்தான் அதனல், அவர்களுக்குத் திருச்சியும் சுற்றுப் புறங்களும் கன்ருகத் தெரியும். அது மட்டுமா? திருச்சியிலுள்ள பையன்களையும் அநேகமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். இதனுல் புதுப் பையனை ரமணி. யைக் கண்டு பிடிப்பது வெகு சுலபம்தான் என்று அவர்கள் நினைத்தார்கள். திருச்சியில் அவர்கள் சுற்ருத இடமில்லை; தேடாத தெருவில்லை; துழையாத கோயில் இல்லை. தெருவிலே போவோர் வருவோரை யெல்லாம் பைனுகுலர் வைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் ! எதிரிலே-அருகில் கிற்பவர்களைப் பார்ப்பதற்குக்கூட பைகுைலரை لاسه யோகித்தார்கள்! மாற்றி மாற்றி இருவரும் இப்படிச் செய்வதைச் சிலர் வேடிக்கையாகப் பார்த்தார்கள். சிலர் பையன்கள் இப்போது தான் பைனுகுலர் வாங்கியிருக் கின்ருகள் போலிருக்கிறது!’ என்று கேலி செய்தார்கள். இன்னும் சிலர், சுத்தப் பைத்தியங்கள் என்று கிண்டல் செய்தார்கள். இரண்டு நாட்களாகக் கால் வலிக்கத் தேடியும் ரமணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை ! இதற்குள் ஆனந்தன் சேர்த்து வைத்திருந்த பணத்தில் பாதியைக் காலிசெய்துவிட்டான் குண்டுமணி 1 அடிக்கடி பல காரமும், காப்பியும், ஷர்பத்தும், பழமும் வாங்கி வாங். கிச் சாப்பிட்டால்-அதுவும் குண்டுமணி சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால், பணம் காலியாகாமல் பெருகிக் கொண்டு இருக்குமா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/111&oldid=807838" இலிருந்து மீள்விக்கப்பட்டது