பக்கம்:பர்மா ரமணி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தக் கதை சபர்மா ரமணி’ என்னும் இக்கதை கல்கி பத்திரிகை வில் தொடர்கதையாக வெளிவந்தது. வாரா வாரம் தொக ராக வெளிவந்த இக்கதையைப் பல சிறுவர் சிறுமியர் தனியாக எடுத்து, புத்தகம் போல் சேர்த்து வைத்திருக்கி ருர்கள். ஆயினும், எல்லாக் குழந்தைகளும் எந்தக் காலத் திலும் படித்து இன்புற இதைப் புத்தகமாக வெளியிடுவது தான் சிறந்த வழி. இதை உணர்ந்தே இப்புத்தகத்தை வெளியிடுகிருேம். --- - - - - - - - - - - - - - பர்மா ரமணியில் அன்பின் பெருமையை மிகவும் அழகாக எடுத்துக் காட்டியிருக்கிருர் ஆசிரியர். ரமணி என்னும் அனதைச் சிறுவன், தனக்கு ஆதரவளித்தவர்க ளிாம் எவ்வளவு அன்பாக இருக்கிருன் ! அவனிடம் நாடக சபா மானேஜர் மதுரநாயகமும், பர்மாப் பணக்காரர் சிற்சபேசன், அவர் மனைவி காமாட்சி அம்மாள், மகள் மாலதி முதலியோரும் எவ்வளவு தூரம் அன்பு வைத்திருக் கிரு.ர்கள் : இரண்டே நாட்கள்தான் ரமணியுடன் பழகிய சுந்தரம்கூடத் தனது அன்பை எப்படிக் காட்டுகிருன் ! அன்பை அடிப்படையாக வைத்து எழுதப்பெற்ற இந்த நெடுங்கதையில் பல அற்புத, ஆச்சரிய சம்பவங்களைப் புகுத்திக் கதைக்கு விறுவிறுப்புக் கொடுத்துள்ளார், ஆசிரி யர், யாவும் சிறுவர் சிறுமியர் உள்ளத்தைக் கவரக்கூடிய சம்பவங்களே. - - இக்கதையை நான்காம் பதிப்பாக வெளியிட அனுமதி தந்த ஆசிரியருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. - சென்னை } 1–1 2-69 பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/3&oldid=808186" இலிருந்து மீள்விக்கப்பட்டது