பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்திரிகைகளெல்லாம் லாங்லியைப் பரிகாசம் செய்து எழுதின. ஆனால், அந்தப் பரிகாசம் ஓய்வதற்கு முன்னாலேயே, எந்திரத்தின் உதவியால் தானகவே ஆகாயத்தில் பறக்கும் விமானத்தில் மனிதன் ஏறிக்கொண்டு போக முடியும் என்று இரண்டு அமெரிக்கர்களே காட்டிவிட்டார்கள்.

    ஆர்வில் ரைட் (Orvil Wright) என்பவரும் வில்பர் ரைட் (Wilbur Wright)என்பவரும் அமெரிக்கா தேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள். அவர்கள் சிறுவர்களாக இருந்த போது ஒரு நாள் அவர்களுடைய தந்தை ஒரு புதிய பொம்மை வாங்கிக்கொடுத்தார். அது சாதாரணபொம்மையல்ல. அதிலுள்ள வில் ஒன்றை அழுத்தினால் அது ஆகாயத்தில் கிளம்பிச் சென்று, சிறிது நேரம் சுழன்று கொண்டிருக்கும். அந்தப் பொம்மை அவர்களுக்குச் சிறு வயதிலேயே பறப்பதில் ஆசையுண்டாக்கியது. பள்ளிக்கூடப் படிப்பை முடித்த பிறகு, அந்தச் சகோதரர்களில் ஒருவர் ஒரு சிறிய பத்திரிகை நடத்தினர். மற்ருெருவர் ஒரு சைக்கிள் கடை வைத்தார். ஓய்வு நேரங்களிலே கிளேடர் செய்து பறக்கவிடுவதில் அவர்கள் ஆர்வங் காட்டினர்கள். ஒனூட், லீலியன்தால் ஆகிய இருவரும் செய்த முயற்சிகளே இவர்கள் பயன்படுத்திக்கொண்டு நல்ல நல்ல கிளேடர்கள் கட்டினர்கள். அவற்றில் சில அபிவிருத்திகளையும் செய்தார்கள். அதனல் அவர்கள் 1902-இல் கட்டிய கிளைடர் மிகச் சிறந்த முறையில் பறந்தது. அதிலே ஒரு பெட்ரோல் எஞ்சின வைத்துவிட்டால் நிச்சயமாக அது மனிதன் ஏற்றிக்கொண்டு தானகவே பறக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். சைக்கிளுக்கு வைக்கும் சிறிய பெட்ரோல் எஞ்சின் ஒன்றைத்தயார் செய்தார்கள். அந்த எஞ்சினும் கிளைடரும் அவர்களுடைய சிறிய தொழிற்சாலையிலேயே அமைக்கப்பட்டன. 1903-ஆம் ஆண்டில் அவை தயாராகியிருந்தன.
    மனிதனையும் சுமந்துகொண்டு அந்த விமானம் எந்தி ரத்தின் உதவியால் 1903, டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி
                       21