பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23கந்தன் இதுதான் சமயம் என்று அவள் காதிலும் கழுத்திலும் கையிலும் இருந்த நகைகளை யெல்லாம் கழற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான். நட்ட நடுக்காட்டில் முத்துமணி தன்னந்தனியாகத்துங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் கண் விழித்தபோது பொழுது நன்கு விடிந்து விட்டது. எங்கும் ஒரே வெளிச்சமாய் இருந்தது. காட்டுப் பறவைகள் அங்கும் இங்கும் பறந்து சென்று இரை தேடிக்கொண்டிருந்தன. ஒரு புள்ளிமான் குட்டி துள்ளித் துள்ளி ஓடுவது வேடிக்கையாக இருந்தது. குரங்குக் குட்டிகள் கிளைக்குக் கிளை தாவிப்பாய்ந்தும் குட்டிக்கரணம் போட்டும் வேடிக்கை விளையாட்டுகள் ஆடிக் கொண்டிருந்தன; அவை ஒன்றன் வாலை ஒன்று பிடித்துத் தொங்கி ஒரு மரத் துக்கும் இன்னொரு மரத்துக்கும் பாலம் அமைத்தன. அந்தக் குரங்குப் பாலத்தின் மீது சில குரங்குகள் நடந்துசென்றன.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்துமணி, கந்தா, இந்தக் குரங்குகள் எவ்வளவு அழகாய் விளையாடுகின்றன! என்று சொல்லித் திரும்பினாள். பக்கத்தில் கந்தனைக் காணாமல் திடுக்கிட்டுப் போனாள்.

கந்தா...கந்தா? என்றுகூவினாள் முத்துமணி, காட்டில் அவளுடைய குரலின் எதிரொலி தான்