பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46



மலிருந்தது. ஆகவே கண்ணன் தான் வேலை செய்யும் வீட்டுக்காரரிடம் மிகுதியாகக் கடன் வாங்கியிருந்தான். தவிர ஒரு ரூபாய் கூடச் சேமித்து வைக்க முடியவில்லை.

கண்ணனுக்கு மனத்திற்குள் ஒர் ஆசை இருந்தது தான் வேலை செய்யும் பணக்காரருடைய வீட்டைப் போல் ஒரு பெரிய வீடு கட்டி அதைத் தன் மகள் பொன்னிக்குக் கொடுக்க வேண்டும். அவள் பெரிய பெண்ணாக வளர்ந்து வருவதற்குள் எப்படியாவது ஒரு பெரிய வீடு கட்டிவிட வேண்டும். ஆசை தான் பெரிதாக இருந்ததே தவிர அவனால் ஐந்து ரூபாய் கூட மிச்சம் பிடிக்க முடியவில்லை.

ஒருநாள் அந்தப் பணக்காரர் குடும்பத்தோடு வெளியூர் போயிருந்தார். அன்று காலையில் தோட்ட வேலையெல்லாம் முடிந்தது. பகல் சாப்பாட்டுக்குப் பிறகு கண்ணன் ஊருக்குப் பக்கத்தில் இருந்த மலையை நோக்கி நடந்தான். அந்த மலையின் மீது ஒருமுருகன் கோயில் இருந்தது. முருகனை வணங்கித்தன் ஆசைகளையெல்லாம் வாய் விட்டுச் சொல்லி வரம் கேட்க வேண்டும் என்றுதான் கண்ணன் அந்த மலைக்குச் சென்றான்.

மலையின் உச்சியில் ஒருசிறிய கோயில் இருந்தது.அந்தக் கோயிலின் உள்ளே அழகான மயிலின் மீது கையில் வேலுடன் கம்பீரமாக முருகன் உட்கார்ந்