பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

தெய்வாதீனம் (கட்டுக் கதை)


தெய்வாதீனம் என்று ஒன்றுண்டு என்று, இவ்வுலகில் யார் நம் பினாலும், நம்பாவிட்டாலும், மூன்று பெயர் இதை நம்புகிறார்கள் அம் மூன்று பெயர்களில், நான் ஒருவன், மற்ற இருவர் என் தாய் தந்தை யர்கள். இதை நம்புவதற்காக இதை வாசிக்கும் நண்பர்கள் சிரிப்ப தானால், எனக்கு ஆட்சேபனையில்லை. ஆயினும் அப்படிப்பட்டவர் களுக்கு, ஒரு வேண்டுகோள் இச்சிறுகதையை முற்றிலும் படித்து விட்டு பிறகு, தெய்வாதீனத்தில் அவர்களுக்கு நம்பிக்கையில்லா விட் டால் அவர்கள் தாராளமாகச் சிரிக்கலாம்.


நான் பிறந்த ஊர் மதுரை என் தகப்பனார் மறவகுலத்தில் ஓர் தலைமை வாய்ந்தவர் .மாலிக்காபூர் என்னும் மகம்மதிய சேனாதிபதி தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து மதுரையைத்தாக்கிய போது, மதுரைக்கு அரணாயிருந்த மதிற் சுவரின் வட அலங்கத்தைக் காப்பதில் என் மூதாதைகளில் ஒருவர் தன் உயிரைக் கொடுத்ததாக, எங்கள் ஜாதியருக்குள் ஓர் கதை சொல்லப்படுகிறது ; இது எவ்வளவு நிஜமோ எனக்குத் தெரியாது ; ஆயினும் என் முன்னோர் களிடமிருந்து என் தகப்பனார், படைக்கஞ்சா, வீரம் பொருந்திய குணத்தையுடைய வராயிருந்தார் என்பதை அறிவேன்; அவர் இக்குணத்தினால் தன் இள வயதிலேயே, முதல் உலகயுத்தம் ஆரம்பமான போது ஆங்கிலேய ராணுவத்தைச் சேர்ந்தார். அதில் எதற்கும் அஞ்சா சுத்த வீரன் எனப்பெயர் பெற்று ஓர் யுத்தத்தில், விக்டோரியா கிராஸ் (Victoria Cross) என்னும்பதக்கத்தையும் பெற்றார் யுத்தம் முடிந்தவுடன், என் தாயாரின்வேண்டுகோளுக்கிணங்கி, நடுவயதிலேயே, உபகாரச் சம்பளம் வாங்கிக்கொண்டு, ராணுவத்தை விட்டு விலகினார்.


என் தகப்பனார், தாயார், நான், ஆகிய மூவரும், சுமாரான செல்வாக்கில் வாழ்ந்து வந்தோம். என் தகப்பனார், என்னை இளவயதிலேயே ராணுவத்தைச் சேரும்படி வற்புறுத்தினார் என்ன காரணத்தினாலேயோ அது எனக்குப் பிடிக்கவில்லை . நான் என் தாயாரிடம் சொல்லி அவர் களைக் கொண்டு என்னை கலாசாலையில் படிக்க, என் தகப்பனார் அனு மதிக்க உத்திரவு பெற்றேன்.


அப்படியே சென்னை மாகாணக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமானது .அச் சமயம் நான் பி. ஏ. பரீட்சைக்கு வாசித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் நான் மதுரைக்கு வந்து சேரவேண்டுமென்று, என் தாயாரிட மிருந்து ஒரு தந்தி வந்தது, மனதில் அதிக வருத்தத்துடன், உடனே