{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் கடமை தவறா அதிகா ரிகள்தம் கவனம் சட்டத்திலே மடமை நிறைந்த மக்கள் நிலையோ மானம் இழப்பதிலே புடவை உடுத்தும் பெண்கள் தரமோ பேசும் வகையிலில்லை நடன மாடிக் களித்தான் இபுலீஸ் நல்லர சேற்றங்கே மன்னன் தனிலும் அழகன் அறிஞன் வாலிப நல்லமைச்சன் இன்னும் திருமணம் செய்யா நிலையில் இருந்தான் பதவியிலே அன்னோன் குலத்தால் குணத்தால் தீமை அணுகாப் பாங்கினனே உன்னுவான் அரசன் நிலையும் நாடு உற்ற தீமைபற்றி ஐம்பெருங் குழுக்கள் ஆயத் தலைவர் அரசனை வாழ்த்துவதும், பைம்பொன் அணியும் பெண்கள் கண்ணீர் பனித்துக் கலங்குவதும். சைனியத் தோர்கள் அரசனைக் காக்கும் சடங்கினர் ஆனதுவும் (32) (33) பைம்புனல் நாடு தீமையில் சிக்கி பரிதவித் திடுவதையும் (34) தன்னந் தனியே அமர்ந்தே அமைச்சன் தனக்குள் சிந்திப்பான் "என்ன வகையில் முயன்றால் நாட்டை எழில்பெற வைத்திடலாம் துன்னும் தீமை தொலைந்தே ஏசுத் துலக்குவாய் வழிஎனக்கே மன்னும் புகழுடை இறைவா," என்றே வாழ்த்தி வேண்டிடுவான் 1. சாத்தான் (35)