பக்கம்:பல்சுவை விருந்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VÄHI

குறளைக் கையாண்டவர்களில் கம்பன், திருத்தக்கதேவர், இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், புகழேந்தி போன்ற புலவர்கள் முக்கியமானவர்கள் எனக் கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கதாகும். திருக்குறள் ஒரு வைட்டமின் மாத்திரைக்கு நிகரானது எனக் கூறும் ஆசிரியர், உரை எழுதுபவர்கள் முன்னுக்குப் பின்னான முரணான கருத்துக்களை கூறுவதற்கு ஆதங்கப்படுகிறார். இருப்பினும் இந்நூல் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.

பல்கவைகளைத் தன்னகத்தே அடக்கியுள்ள பாவேந்தர் பாடல்களில் படிமங்கள் சிலவற்றை - அதாவது கட்புலப் படிமங்கள், செவிப்புலப்படிமங்கள், சுவைப்புலப் படிமங்கள், நாற்றப்புலப் படிமங்கள், தொடுபுலப் படிமங்கள், இயக்கப்புலப் படிமங்கள், கலவை நிலைப் படிமங்கள், மின்வெட்டுப் போன்ற மணிமொழிப் படிமங்கள் போன்றவைகளைக் குறிப்பிட்டு, அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும்புறத்தில் கூத்தாடுகிறது காற்று, அது தென்றலாக உருவெடுப்பதைப் பொதிகைமலை விட்டெழுந்து சந்தனத்தின்..... என்ற பாடலின் மூலம் இப்புலப் படிமங்கள் ஒருங்கே அமைந்திருப்பதை கட்டிக் காட்டியுள்ளார். மின்வெட்டு போன்ற மணிமொழிப் படிமத்தில், ஆசிரியர் கையாண்டிருக்கும் சொற் களும், கருத்துகளும் மின்வெட்டினைப் ப்ோன்று நறுக்குத் தெறித்தாற் போல அமைந்துள்ளது வியக்கத்தக்கதாகும். படிப் போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன என்றால் அது மிகையாகாது.

ஆசிரியர் அடுத்து வாணவெளியில் உள்ள மண்டலங்களைத் தெளிவாகச் சொல்லி இராக்கெட்டு எவ்வாறு அமையப்பெறுகின்றது. இயக்கப்பெறுகின்றது போன்ற துல்லியமான விவரங்களைக் கூறி, விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்கள் எதிர்நோக்கும் இடர்கள், நெருக்கடிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கிறார். இக்கட்டுரையைப் படிக்கும் போது ஏதோ நாமே விண்வெளியில் பயணம் செய்வது போன்ற அநுபவம் ஏற்படுகிறது.