பக்கம்:பல்சுவை விருந்து.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பல்சுவை விருந்து

நம்மிடையேயும் பலரிடம் இந்த உணர்ச்சி தோன்றுகின்றது. கவிதையின் வளர்ச்சி நம் உணர்ச்சியுடன் கலக்கத் தொடங்கி யதும், அது உடனே புதுக்கவிதை' என்று அங்கீகாரம் பெற்று விடுகின்றது.

புன்னகை மன்னன்’ என்ற தலைப்பில் காணப்பெறும் ஒரு கவிதை சுதந்திரத்திற்குப் பிறகு உள்ள நாட்டின் நிலையை நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

ஹே மஹாத்மா!

இன்னமும்

இந்த நாட்டில்

புன்னகையோடு

இருப்பது -

உன்னுடைய

ஒரே முகந்தான்!

எங்கள் முகங்களோ -

புகைப்படங்களில் கூடப்

புன்னகைக்க

முடியாதவைகள்:

ஏனெனில் -

உன்னுடைய கதராடைகள்...

தறியாசனத்தில்

இருந்தவரை

எங்கள் கண்ணிரைத்

துடைத்தன.

அவைகள்...

அரியாசனத்தில்

அமர்ந்த பின்னர் -

எங்கள்

புன்னகைகளைத்

3. பொய்க்கால் குதிரைகள் - பக். 48.