பக்கம்:பல்சுவை விருந்து.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாஜி பற்றிய நினைவுகள் 1Ꮾ9

ஏற்படாது. மின்சாரம், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், காவலர்கள், அஞ்சல் நிலையத்தினர் போன்றோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்ற வரன்முறை வேண்டும். பிரச்சினைகளைப் பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். வேலை நிறுத்தத்தால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கக் கூடாது. வேலை நிறுத்தத்தால் அதன் விளைவாகத் தொடரும் ஊர்வலம், எழுப்பும் கோஷங்கள், உண்ணாவிரதம் போன்றவற்றால் பொதுமக்கள் ஆதரவு கிட்டும் என்று நினைப்பது தவறு மாறாக வெறுப்புதான் நேரிடும்.

4. Qşırpustlass1@Liitės gregául Nuclear Physics grep நூலை மொழி பெயர்க்கும் திட்டத்தைச் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது. 53 பேர் எழுதியதாகத் தகவல். அவர் களில் ஒருவனாகிய நான் எழுதிய மொழி பெயர்ப்பு (1954-56) பரிசினைப் பெற்றது. இந்த அறிவியல் குழந்தை பத்தாண்டு கட்குப் பின்னர் நாமகரணம் பெற்று வெளி வந்தது (1966). இயற்பியல் கற்ற இராஜாஜியிடம் அணிந்துரை பெற அணுகி னேன். தமிழில் முடியுமா? என்ற நூலும் திண்ணை ரசாயனம்' என்ற நூலும் அவரைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தன. அதற்கு அவர் 'உங்கட்குப் பல்கலைக்கழகப் பணி. துணை வேந்தரை அணுகி அவரிடம் அணிந்துரை பெற்றால் உங்கள் எதிர்காலம் சிறக்கும். இந்தக் கிழவனை விட்டு விடுங்கள்' என்று எழுதினார். நான் 'ஐயா, நான் உழைப்பினால் உயர நினைப்பவன். துணை வேந்தரை அணுகினால் அவர் இயற் பியல் பேராசிரியரை எழுதச் சொல்லி அதில் அவர் கையெழுத் திட்டு அனுப்புவார். வாசகம் இயற்பியல் பேராசிரியரின் உடையதாகவும் கையெழுத்து துணை வேந்தருடையதாகவும் இருக்கும். நான் இதை விரும்பவில்லை. தாங்கள் எழுதினால் இரண்டும் தங்களுடையனவாக இருக்கும். அதில் தங்கள் ஆசியும் இருக்கும். நான் வேண்டுவது உங்கள் ஆசியே. அணிந் துரை ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். காரணம் Gottuigen