பக்கம்:பல்சுவை விருந்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2貌 பல்சுவை விருந்து

இவ்வாறு பன்னெடு நாட்கள் சென்ற பிறகு உயிர் மனம் என்னும் சிறந்த கருவியைப் பெற்றது. இந்தக் கருவியைப் பெற்றிருக்கும் மனிதன்தான் இன்று இவ்வுலகிலுள்ள அனைத்தையும் அடக்கி ஆளுகின்றான். இத்தகைய ஒரு சிறந்த மனத்தைப் பண்படுத்துவதற் காகத்தான் வள்ளுவர் நூல் துணையாக நிற்கிறது. இவை உலகில் இருநூறு கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் மக்களாய் வாழ்வோரின் தொகை மிகவும் குறைவு பெரும்பாலோர் மக்க ளாக மட்டிலும் காணப்படுகிறார்கள். ட்ாக்டர் மு. வரதராசன் அவர்கள் கூறுகிறபடி பலர் மர வாழ்க்கையில் நிற்கிறார்கள் பலர் நத்தைகளாய் வாழ்ந்து நகர்கிறார்கள்; பலர் எறும்புகளாய் ஊறுகிறார்கள்; பலர் வண்டுகளாய் அலைகிறார்கள்; பலர் விலங்குகளாய்த் , திரிகிறார்கள்; சிலரே மன உணர்வைப் பண்படுத்தி மக்களாய் வாழ்கிறார்கள். அறிவை மட்டிலும் வளர்த்துக் கொண்டால் போதாது என்பது வள்ளுவர் கருத்து.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லாத வர் (997) என்று அவர் கூறியுள்ளது ஈண்டு எண்ணற் பாலது. தொல்காப்பியரும்,

உயர்தினை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை எண்மனார் அவரல பிறவே." என்று திண்ை வகுத்த நயத்தையும் இவ்விடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "ஈண்டு மக்கள் என்றது மக்கள் என்னும் உணர்வை. எனவே, மக்களேயாயினும் மக்கள் என்று சுட்டாது பொருளென்று சுட்டிய வழி உயர்திணை எனப்படாது' என்று சேனாவரையரும் இதனை விரித்தோதுகிறார்.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த திருக்குறள் பிற்காலத்தில் எழுந்த நூல்களுக்கெல்லாம் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

  • திருவள்ளுவர் அல்லது.வாழ்க்கை விளக்கம்: பக். 3. 5. தொல் - சொல் - கிளவியா, 1