பக்கம்:பல்சுவை விருந்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பல்கவை விருந்து

வானம் பாடியின் இசையில் ஈடுபட்ட கவிஞர்,

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா? தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிகுரலும் மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ? வானுர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன் தேனுதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி வையத்து மக்கள் மகிழக் குரலெடுத்துப் பெய்த அமுதா?" என்ற கவிதையைத் தருகின்றார். இதில் பல்வேறு செவிப் புலப் படிமங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

சுவைப்புலப் படிமங்கள். இவ்வகைப் படிமங்கள் புரட்சிக் கவிஞரின் பாடல்களில் அதிகமாகக் காணப் பெறவில்லை. இவற்றையும் தேடிக் காண்போம்.

சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு' என்ற கண்ணியில் குழந்தையையும் காண்கின்றோம்! கன்னல் சாறு, கனியின் ரசம் இவற்றின் சுவையையும் துய்க்கின்றோம்.

வீட்டின் உட்புறத்து விளைந்த தான இனிய யாழிசை கனிச்சாறு போலத் தலைவன் தலைவியைத் தழுவ லாயிற்று.” என்ற அடிகளில் கனிச்சாறு போல இனிக்கும் யாழிசையைக் கேட்டாலும் கனிச்சாறின் சுவை நாவில் இனிக்கின்றது. சுவைப் புலப் படிமத்தைத் துய்க்கின்றோம்.

15. பாதா.க. (2) - 6. வானம்பாடி, 16. பாதா.க. 41 ஆண்குழந்தை தாலாட்டு. 17. டிெ - இரண்டாம் தொகுதி - 16. பெற்றோர் இன்பம்.