பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

61



சுண்ணாம்புச் சாந்து பூசப்படும். பாறை, தன் மீது திட்டப்படும் நிறத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லாததாதலால், சுண்ணச்சாந்து பூசப்படும். சலித்து எடுக்கப்பட்ட பூமணல், வைக்கோல், கடுக்காய் முதலியவற்றுடன் கல்ந்து வெல்ல நீருடன் அல்லது பனஞ்சாற்றுடன் அரைக்கப்பட்ட சாந்து சுவரில் அல்லது கூரையில் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும், அதை எளிதில் பெயர்க்க முடியாது. ஈரம் காயுமுன்பே ஒவியக்காரன். மஞ்சள் கிழங்கைக்கொண்டு இரேகைகளை வரைந்துகொள்வான். சுண்ணாம்புடன் கலந்த மஞ்சள் நிறம் மாறிச் சிவப்பாகத் தோன்றும், அழியாமலும் இருக்கும்.ஒவியப்புலவன் இரேகைகட்கு நிறங்களைத் தீட்டுவான். அவன் சிவப்பு, மஞ்சள் முதலிய நிறங்களைத் தரும் பச்சிலை நிறங்களையே பயன்படுத் துவான். ஈரம் காய்ந்த பிறகு, சுவர் நன்றாய் உலர்வதற்கு முன்பே, கூழாங்கற்களைக் கொண்டு சுவர்களை வழவழப்பாக்கி மெருகிடுவான். இவ்வாறு திட்டப்படும் ஒவியம் அழியாது நெடுங்காலம், இருக்கத் தக்கதாகும்”[1]

சிற்பக் கலை

மஹேந்திரன் குடைவித்த வரைக்கோவில்கள். அவன் காலத்துச் சிற்பத்திறனை விளக்குவனவாகும். ஒவ்வொரு கோவிலிலும் உள்ள உருவச்சிலைகள், சுவர்கள் மீதுள்ள வாயிற்காவலர் உருவங்கள், புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள், திருச்சிராப்பள்ளி மலைக் கோவிலில் உள்ள அழகிய வேலைப்பாடு கொண்ட சிற்பங்கள் ஆகிய அனைத்தும் ஏழாம் நூற்றாண்டின் சிற்பக்கலை உணர்வை உலகறியச் செய்வனவாகும்.


  1. 1. பி.நா. சுப்பிரமணியன் ‘பல்லவ மஹேந்திரவர்மன்’, பக்.107-109.