பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö4

பல வகை விளையாடல்கள்

மாதுகுத்துதல்

மாது மாது, மன்னவன் தம்பியைக் கோது கோது கொல்லத்து வெத்தலே; வெள்ளிக் கரண்டகம்; சொல்லிக் கொடாதே; தாயைக் குடு; தம்மைக் குடு; உற்ருரைப் பெற்ருரை ஊரைக்குடு; குடுகுடு நாதா, குளவிய நாதா, கொட்டையில் லாப்பழம் என்ன பழம்?

வாழைப்பழம்.

வாழைப் பழத்துக்குத் தோலேக்கடி, வட்டில் கஞ்சிக்கு வாயைப் பிள; பிள பிள பிள.

மார்பில் غوث يع கொண்டு ஓடி விளையாடுதல்

முன்னே போள மீனுட்சி,

சின்ன வீட்டுக்கு விளக்கேத் தினேயா?

கையில் குழந்தை இருக்குது;

குழந்தையைக் கீழே விட்டுவிட்டு,

ஒருகை கூழைக் குடிச்சுவிட்டு, வாயில் பச்சரிசி போட்டுக்கொண்டு மார்பில் தட்டிக்கொண்டு வா.

என்ன குளத்தில் முருகினே?

பீக்குளத்தில் முழுகினேன்;

எங்கள் வீடு எல்லாம் பீயாய் விட்டது;

ஒடு ஒடு.