பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பல வகை விளையாடல்கள்

பழங்கள் வாங்கலாம் கைவீசு; பரிந்து புசிக்கலாம் கைவிசு; தோரைப் பார்க்கலாம் கைவீசு;

திரும்பி வரலாம் கைவீசு.

சாய்ந்தாடல்

சாய்ந்தா டம்மா, சாய்ந்தாடு; சாயக் கிளியே, சாய்ந்தாடு; குத்து விளக்கே, சாய்ந்தாடு; கோவில் புருவே, சாய்ந்தாடு; அன்னக் கிளியே, சாய்ந்தாடு;

'திண்ணேயின் கீழே தவழ்ந்து விளையாடும்

தேனே, மணியே, சாய்ந்தாடு; கண்ணே, மணியே, சாய்ந்தாடு; கற்பகக் கொடியே, சாய்ந்தாடு; சோலேக் கிளியே, சாய்ந்தாடு; சுந்தர மயிலே, சாய்ந்தாடு.

குழந்தைக்குச் சோறு ஊட்டுதல்

காக்கா, கண்னுக்கு மைகொண்டுவா;

to

குருவி, கொண்ட்ைக்குப் பூக்கொண்டுவா;

கொக்கே, குழந்தைக்குத் தேன் கொண்டுவா; கிளியே, கிண்ணத்தில் பால் கொண்டுவா; அப்பா, முன்னே வாருங்கோ; அழாதே என்று சொல்லுங்கோ.

- (2) நடுவிட்டில் வையே - நல்ல துதி செய்யே; வெள்ளிக் கிண்ணத்தில் பாலும் சோறும் எடுத்து அப்பன் வயில் ஊட்டு; அள்ளி வாயில் ஊட்டு;