உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பள்ளி வாழ்க்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி வாழ்க்கை கல்வி, தமிழனுக்குத் தரும் பயன்தான் என்ன? சிந்தித்துப் பார்க்கவேண்டும்? தேவையான கல்வி, அறிவு வளர்ச்சி தரப்படுகிறதா, இங்கே? . இங்கு இன்னமும், நாயன்மார்களின் சரித்திரமும் புராணப் பாடல்களும், இதிகாசச் சுவையும், இளையான் குடிமாறனார், இயற்பகையார் புராணங்களும் பாடத் திட்டத்தில் இடம்பெறத் தவறிடக் காணோம்! சமய அறிவு, வாழ்க்கைக்கு, இவ்வுலக வாழ்க் கைக்கு அப்பாற்பட்ட மேலுலக, இன்ப வாழ்வுக் கருத்துக்களே முதலிடம், பெற்றுள்ளன! அவற்றை விளக்கிடும் ஏடுகளே அதிகம் ! அவைதான் இதிகாசம், புராணம், காவியம், கட்டுரை, கதை என்ற பலப்பல உருவிலே குழைத்துக் குழைத்து, மாற்றி மாற்றித் தரப்படுகின்றன ! ! இகத்தை வெறுத்து, பரத்தில் இன்பந் துய்க்கப் போதிய புண்ணியம் சம்பாதிக்கவேண்டிய இடைக் காலமாக, தங்குமிடமாக, இந்த வாழ்க்கை, இவ்வுலக வாழ்வு அமைந்துள்ளது என்ற போலி வேதாந்தத்தை வளர்க்கும் கருத்துக்கள் பொதிந்த ஏடுகளே அதிகம்! தன்னைப்பற்றிக் கவலைப்பட, தான்வாழ, வாழும் நாடு, தான் பேசும் மொழி போற்றிட, தன்னுடைய சமுதாயத்தின், நாட்டின், நலனுக்காக உழைத்திடத் தமிழன் இன்னும் கற்றபாடில்லை, கற்பிக்கும் ஏடுகளைப் 28