உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பள்ளி வாழ்க்கை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி வாழ்க்கை இளஞ்சமுதாயம், இன்று பள்ளி வாழ்க்கையில் பெறும் அறிவுப் போதனையைப் பொறுத்தே, வருங்காலம் அமையும், அமைய முடியும் என்பது உறுதி ! இன்றைய இளஞ்சமுதாயம், இளைஞர் உலகு, நல்லறிவுபெற்று, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வகை யான கொள்கையைக்கொண்டு முன்னேறிட, பள்ளி வாழ்க்கை ஒரு சிறந்த சாதனமாக, தூண்டுகோலாக, வழிகாட்டியாக அமைந்திடவேண்டும். அதற்கான முறையில் பள்ளிப்போதனை அமைக்கப்படவேண்டும். தேவையான கருத்துக்களைப் போதித்து, தேவையற்ற கருத்துக்களை நீக்கிடத் தயங்கிடக்கூடாது! தமிழன் வாழ, வாழ, தமிழினம் வாழ, தமிழ்நாடு செழிக்க, தமிழ் மக்களுக்கு, தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் உணர்ச்சியூட்ட வேண்டும். தமிழ் ! தமிழ் ! தமிழன் ! தமிழினம், தமிழ்நாடு, திருநாடு என்ற உணர்வு, தன்மானம், தமிழ்ப் பரம்பரை பற்றிய எழுச்சியை ஊட்டவேண்டும்! ஊ தமிழனுக்குத் தகாதவற்றை விலக்கத் துணிவு கற்பிக்கவேண்டும். தன்னுடைய மானத்தைப் பறித்து, மடமைக்கு மண்டியிடும் மூடக்கொள்கைகளைப் புறக் கணிக்கக் கற்றுத்தரவேண்டும், வருங்கால தமிழ் மகனுக்கு, இன்றைய துடிக்கும் இளந்தமிழனுக்கு ! தமிழன் தமிழைப் படிக்கவேண்டும், தமிழினத் 30