உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பள்ளி வாழ்க்கை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணா நிதி அவசர நிகழ்ச்சியா, செய்தியா? அனுப்பு, தந்தி! என்ன அற்புதம்? ஆனாலும் நடக்கிறதே, நடைமுறை யில் நடந்திடக் காண்கிறோமே! 'பணத்தோட்டம்' எனப்படும் 'பாங்கி' (Bank) கள் செய்திடும் சுலப, சாத்திய முறைகள் என்ன ? முன்னேற்றம்! ஒரு சில குறிப்பிட்ட துறைகளில் மட்டுமல்ல! உலக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு கோணத்திலும், முன்னேற்றம், வகையான முன்னேற்றம், நடந்துள்ளது, நடந்துகொண்டே இருக் கிறது! இத்தகைய நேரத்திலே, இத்தகைய முன்னேற்றப் பாதையிலே, உலகம், சென்றுகொண்டிருக்கும் விஞ் ஞான காலத்திலே, நாம் வெறும் வேதாந்திகளாக, உலகளந்தானைப் பாடிக்கொண்டிருக்கும் உத்தம பக்தர் களாக, சிவகாமி நேசனின் திருத்தொண்டர் புராணத் தைப் பாடிப் பூரிக்கும் அடியார்களாகவே இருக்கத்தான் வேண்டுமா? உலகத்தைப்பற்றிய, உலகின் வடிவத்தைப்பற்றிய கருத்து, எண்ணம் ஒரு காலத்தில் ஒருவிதமாக இருந்தது! உலகம் தட்டையானது! உலகம் நீண்ட சதுர வடிவங்கொண்டது, என்றெல்லாம் மக்கள் எண்ணி யிருந்த காலமும் இருந்தது! ஆனால் இன்று? 51