உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பழக்கூடை 2 இரவு நேரம்-நிலவு, ஒளிமழை பொழிந்து கொண்டிருக் கிறது. விடுதலையடைந்த, சந்தனம் தன் புத்திர சந்தானத்தை எண்ணிப் பூரித்தப்படி அவனைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சி பொங்க நடந்து கொண்டிருக்றான், மகன் வாழும் உணவு விடுதி நோக்கி! உலகத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் அவனுக்கு எத்தனை எத்தனையோ புதிய நினைவுகள் மோதுகின்றன. மகன் நன்கு படித்து திறமை பெற்றிருப்பான்-தான் சொன்ன “காதல் ஒரு கடும் விஷம் என்ற உபதேசத்தைக் கடைபிடிப்பான். தந்தை சொல் தவறாத தனயனைப்பெற்ற பாக்கியமே பாக்கியம் இப்படி யெல்லாம் எண்ணியபடி நடக்கும் சந்தனத்தின் காதில் ஏதோ ஒரு கீத ஒலி கேட்கிறது. நிலவு மழையிலே அவனும் பல முறை கீதமிசைத்திருக்கிறான் குமுதாவுடன் -- அதே போன்ற ஒரு கீதம். அவனுக்கு ஆத்திர மூட்டும் கீதம் இப்போதும் கேட்கிறது. குளிர்ச்சி யூட்டும் இசைதான்; அவனுக்குப் பழக்கமான சொற்கள்தான்; ஆனால் இப்போது மட்டும் அவனுக்கு அந்தக் கீதம் இடிமுழக்கமாக இருப்பானேன் குமுதா பாடிய அதே பாட்டுத்தான் அது! சந்தனத்தின் தோளிலே முகத்தைப் பதித்துக்கொண்டு அவள் காதலி இசைத்த கீதம்தான் அது! “காதலோர் தொடர்கதையே! சாதலும் ஏற்போம்—அனுச் சஞ்சலமும் அடையோம் எனும் காதலோர் தொடர்கதையே:" இந்த எழிலும் எழுச்சியுமிக்க வரிகள் சந்தனத்தின் உள்ளத்தைத் தொட்டு உலுக்கிவிட்டன; ‘ஆம் குமுதா தான் அப்படிப் பாட முடியும்-வேறு யாரும் பாடமுடியாது- என்று தனக்குள் கூறிக்கொண்டான். கண்களில் கனல் கிளம் பியது, குமுதா' என்று பயங்கரமாக உச்சரித்தபடி இசை வந்த பக்கம் பாய்ந்தான். அவன் எதிர் பார்த்தபடி பாடியது இருவர் தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/13&oldid=1696932" இலிருந்து மீள்விக்கப்பட்டது