உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பழக்கூடை - ய தந்தையின் திடீர்ப் பிரவேசத்தால் தீ மிதித்தவன் போலாகிவிட்ட என் மலர்ப்பாதமுடையாள்-மனவாட்டத்தை சுமக்க முடியாமல் தூக்கத்திலிருந்து விடுபட்டுத் துடித்துக் கொண்டு தானிருப்பாள் கொல்லைப்புறம் நின்றுகொண்டு, ஒரு குரல் கொடுத்தால்போதும்; எப்படியும் ஓடிவந்து விடுவாள் பூனையின் பாதத்தைவிட மிருதுவான பஞ்சுப் பாதங்களாயிற்றே அவளுக்கு அதனால் அவள் அம்மாவின் காதுகளை நன்றாக ஏமாற்றி விடமுடியும் - இருவரும் சந்திக்க லாம்; இருதயக் கீறல்களுக்கு மருந்து போட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு செல்வம், சித்ராவின் வீடு நோக்கி நடந்தான். கொல்லைப்புற வேலியைத் தாண்டிக் குதித்தான் அப்போது அவன் காலிலே குத்திய முட்கள் கணக்கிலடங்கா. அவைகளையெல்லாம் எடுத்தெறிந்தான். 'இந்த முட்களை எடுத்துவிட்டேன்; என் நெஞ்சிலே சொருகிவிட்ட முட்களை வேதனையில்லாமல் எடுத்துவிட முடியுமா? அல்லது எடுக்கும் முயற்சியிலேயே இறந்து விட வேண்டுமா' என்றெல்லாம் அவனுக்குள்ளாக சொல்லிக் கொண்டான். அந்த நல்ல வாலிபனின் காந்தி நிறைந்த முகம், தூசி நிறைந்த கண்ணாடி போல் ஆகியிருந்தது. நிலவின் ஒளியிலே சித்ரா வீட்டுக் கொல்லை வாயிலை அவன் அடையாளம் கண்டுபிடித்து விட்டான். அந்த வாயிலை நோக்கி அவன் நடந்தான். அவனுக்கே அவனை நம்ப முடியவில்லை. கதவு திறந்து கிடந்தது, சற்று சற்று திகைத்தான் - நின்று கவனித்தான். அவன் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. மீண்டும் உன்னிப்பாக கவனித்தான். உள்ளேயிருந்து தேம்பும் குரல் கேட்டது ! விக்கி விக்கி அழுகிற ஒரு பெண்ணின் தொனிதான் அது ! சு "சரி-நமது விஷயம் அவள் தாய்க்கும் தெரிந்து விட்டது; அதனால் மகளைக் கண்டித்திருக்கிறாள்!' என்று தனக்குத் தானே பதில் சொல்லிக்கொண்டான். அவன் நெஞ்சு முன்னி லும் பலமாக அடித்துக் கொண்டது. அழுகை ஒலியுடன் - 'அம்மா! அம்மா! என்ற ஒலியும் கொஞ்சம் உச்சஸ்தாயில் கேட்டது. ‘“சித்ரா!’” என்று கூப்பிட்டுவிடலாமா என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/23&oldid=1696942" இலிருந்து மீள்விக்கப்பட்டது