உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள தொடர்கதை 31 யைக் கருக்கிட இனியும் துணியேன் என்று வருத்தத்தோடு கூறி என்னை வழியனுப்பினான். வெளியூரிலிருந்த சந்தனத் தின் வீட்டுக்கு வரும் வழியிலே, ஒரு சிற்றூர். அதன் பெயர் பூரித்தார்குடி. அந்த பூரித்தார்குடி கிராமத்திலே ஒரு சாமியார் இருக்கிறார் ; மிகவும் பெரிய மகான். அவரிட முள்ள ஒரு கோழியை ஒரு வெறிநால் கடித்து, அந்தக் கடி பட்ட கோழி, சாமியாரைக் கொத்தியதால் அவர் இறந்து சமாதியாகிவிட்டார். அந்த சமாதியிலே தினந்தோறும் பேய் பிடித்த பெண்கள் ஆடுவார்கள். அவர்களின் நோய் நீங்கும். அந்த இடத்திலே நீயும் போய், கோழிகடி சாமி யாரைக் கும்பிட்டு அருள் பெற்றுப்போ என்று அண்ணன் சொல்லியனுப்பினான். . ள அங்கே கோழிக்கடி சாமியாரின் சிஷ்யர் குஞ்சுக்கடி சாமியா என்னைப்பற்றி விசாரித்தார். அந்தப் பெரிய மகானின் சிஷ்யர் எனக்கும் சந்தனத்துக்குமுள்ள காதலையும் அதில் குறுக்கிட்ட இடையூறுகளையும் நடந்தது நடந்தபடி சொன்னார். அதோடு, இனிமேல் நான் சந்தனத்தையோ அல்லது என் மகனையோ பார்க்கக் கூடாதென்றும் - என் ஜாதக பலன்படி, அப்படிப் பார்ப்பதால் உடனடியாக அவர்கள் இறந்து விடுவார்கள் என்றும் சாமியார் கட்டளை யிட்டார் என் ஜாதகத்தால்தான், என் காதலனின் முகம் கருகி விட்டதென்றும் சாமியார் சொன்னார். என் கணவனும், மகனும் எந்த இடையூறுமின்றி சுகமாக வாழவேண்டுமானால் அவர்களுக்கும் எனக்கும் இனி தொடர்பே இருக்கக்கூடா தென்றும் அவர் கூறிவிட்டார். சந்தனத்தின் வாழ்வும், செல்வனின் வாழ்வும் வளப்பட்டால் போதுமென எண்ணிய நான், என்னை அண்ணன் வீட்டிலேயே மறைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தேன். காதலன் முகமும், செல்வன் முகமும் என் இருதயத்திலே பதிந்திருக்கும்போது வெளிப்பார்வைக்கு ஏன் என்ற திருப்தியால் வாழ்ந்தேன். என் பார்வைப்பட்டு அவர்கள் வாழ்வு பட்டுப் போகுமாம். அத்துணை துட்டலக்கனமாம் நான் பிறந்த வேளை! யாராலும் பிரிக்கமுடியாத எங்களை சாஸ்திரம் பிரித்துவிட்டது. அந்தத் அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/32&oldid=1696951" இலிருந்து மீள்விக்கப்பட்டது