உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி 43 என்று மக்கள் சூழ்ந்து கொள்வர். று என்ற செய்தி 86 "மேதை, 'வந்துவிட்டார் எங்கும் பரவும். தனிமையை நாடிவந்த அவன் புகழ்தரும் தலைவலி தாங்காமல் ஓட்டமாக ஓடி வீட் டுக்குப் போய் விடுவான். ரயிலில் போகமுடியாது. கடைத்தெருப் பக்கம் தலைக்காட்டமுடியாது. கண்காட்சி சாலைகளில் காலடி வைக்கமுடியாது. புகழ் - புகழ் - புகழ் - எங்கும் புகழ்! அந்த மேதையின் நற்பண்புகள் பற்றி பேசா தார் இல்லை. காதலனும் காதலியும் கொஞ்சிடும் அந்த அழகான நந்தவனத்தைப்பற்றி உணர்ச்சி பொங்கிட வர்ணித் திருக்கிறானே ; அந்த ஒய்யார வனத்திலே உல்லாச கீதம் பாடும் ஜீவஜோடிகளை யாரும் சித்தரிக்காத வண்ணம் சித் தரித்து எழுதி இருக்கிறானே; படிக்கும் போதே நமக்கு ஒரு போதை தோன்.றுகிறதே; அதை எழுதும்போது அவன் நிலை எப்படி இருந்திருக்கும்-இப்படியெல்லாம் எழுதுவதுபோன்ற கற்பனையை வாழ்நாளில் தத்ரூபமாக சந்திக்கவேண்டுமென்று விரும்ப மாட்டானா? அந்த இன்ப விருப்பத்தை நிறைவேற் றிக் கொள்ள முடியாமல் தவித்திருக்கமாட்டானா? அந்தத் தவிப்பின்போது ரோஜா கிடைக்காவிட்டால் ஒரு கனகாம்பரம் -என்ற அளவுக்கு தன் ஆசையை விரித்திருக்க மாட்டானா? என்றெல்லாம் அவனைப் பற்றிப் பேசினர். ‘“ஆச்சரியம்தான்! நீ நினைக்கிறபடியோ, சந்தேகங் கொள்ளுகிறபடியோ, அந்த மேதை, வழுக்கி விழுந்து விடு கிறவனல்ல! நிச்சயம் அத்தகைய வழியில் அவன் இறங்க மாட்டான்” என்று உறுதியோடு பலர் பதிலுரைத்தனர். "நல்லொழுக்க சீலன் என எப்படி நவில முடியும்? நாடு பல சுற்றியிருக்கிறான்?' 8 "ஏடு பல கற்றுமிருக்கிறான்-ஏன் அவன் சற்குணனாய் இருக்க முடியாது!' இப்படிக் கேள்வியும் பதிலும் மாறிமாறி! 6 “தான் எதிர்பார்த்து நடைபோடும், அந்த லட்சியம் கைகூடும் வரையில்; உலகத்திற்கு அந்த ஒப்பற்ற பரிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/44&oldid=1696963" இலிருந்து மீள்விக்கப்பட்டது