உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பழக்கூடை சங்கு: அய்யோ-உன் முகத்தில் திராவகமா ஊற்றி னாங்க! சந்தனம் : ஆமாம் சங்கு ஆமாம்! நான் அழகா யிருந்தது பிடிக்காமல் அல்ல; என் அழகில் மயங்கி விட்டா ளாம் அவள்-அதைத் தடுப்பதற்காக என்னை சித்ரவதை செய்து விட்டார்கள். சங்கு: கொஞ்சம் விபரமாகச் கதையை!... சொல்லண்ணே உன் சந்தனம்: சொல்லுகிறேன் குறுக்கே கொஞ்சம் பேசாமலிரு குமுதம் என்னோடு படித்தவள், குபேரன் வீட்டுக் ரு ! கோதை. நானோ குடியானவன் மகன். இறந்துபோன என் அப்பாவின் எண்ணத்தை எப்படியும் பூர்த்தி செய்ய எண்ணி. என் தாய் என்னைப் படிக்கவைத்தாள். படித்தேன் குமுதமும் நானும்..... சரி, கதையை வளர்த்துவானேன்; காதலர்களாகி விட்டோம். வலியோன்மகளை எளியோன் காதலித்தேன் என்பதைத் தவிர எங்கள் காதலில் வேறெந்தக் குற்றமும் யாரும் சொல்ல முடியாமல்தான் இருந்தது. வழக்கம்போல் எங்களின் திருமணத் திட்டம் முறியடிக்கப்பட்டது. வயதான என் தாயும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள் குமுதமோ ஒரு நாள் இரவு என் குடிசைக்கு ஓடிவந்து கொத்தடிமை ஆகிவிட்டேன் உங்களுக்கு-குடும்பம் நடத்து வோம் வாருங்கள் என அழைத்தாள். 'எதிர்ப்பு மலையாகுமே குமுதம்!' என எச்சரித்தேன். 'மலையைப் பிளக்கும் சிற்றுளி நம் காதல் என்றாள்-மறுக்க முடியுமா என்னால்! அன்றிவே பயணமானோம், அயலூரிலே எங்கள் குடும்பம் ஆரம்பமானது ஆனந்த மானது ஆனந்த மயமான அந்த வாழ்க்கையை நினைத்து இப்போது அழுவானேன்! எங்களுக்கு ஒரு செல்வமும் தோன்றினான். சங்கு: பிள்ளையிருக்கான அண்ணே உனக்கு?

சந்தனம்: இருக்கிறான்-கேள் பாக்கியை!... குழந்தை யுடன் குதூகலமாய் நடை போட்டோம் வாழ்வுப் பாதையில்! குமுதாவின் அண்ணன் மலேயா போயிருந்தவன் சம்பாதிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/9&oldid=1696928" இலிருந்து மீள்விக்கப்பட்டது