பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ ZTS TTOmmmO SAAAAASASASS * 9 研 é * * ● 桑 * W 丸 钞 ä a W % 143 ಇಣ வீட்டிற்குப் போய், அதன் மகனாக வாழ்ந்து, மனிதன் திருடிக்கொண்டு வந்தான் (சிவப்பு இந்தியப் புனைகதை).” புரோமிதியூஸ் ஜியூஸ் என்ற கடவுள் ஒளித்து வைத்திருந்த தீயை, அக்கடவுளின் மனைவி தன் மகனிடம் சொல்லி அவன் திருடிக் கொண்டுவந்து கொடுத்தான் (கிரேக்கப் புனைகதை)." இவை போன்றவை தோற்றப் புனைகதைகள். சில இடங்கள், நிகழ்ச்சிகள், சடங்குகள் பற்றி மனிதனது விளக்கம் புனைகதைகளாகக் கூறப்படும். இவை விளக்கப் புனைகதைகள். இடி இடிப்பது ஏன்? இந்திரன் வில்லின் நாண் ஒலி அது மழைத் தெய்வத்தின் மனைவி ஒர் உரலை உருட்டுகிறாள்; ருத்ரனது கோரச் சிரிப்புதான் இடி, புரோடியூஸின் குரல். இவை (explanatory myts) என்று அழைக்கப்படும். சில புனைகதைகள் மனிதனது சடங்குகளோடு தொடர்புகொண்டு, தோற்றப் புனை கதைகளாகவும், விளக்கப் புனைகதைகளாகவும் இருக்கும். திருக்கலியாணம் ஏன் நடக்கிறது? ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு கதையிருக்கிறது. பெண் பூப்பு எய்தியவுடன் ஏன் சில சடங்குகள் செய்ய வேண்டும்? பார்வதி ருதுவடைந்ததும் செய்த சடங்குகளை எல்லோருக்கும் செய்யவேண்டும். இதுபோலப் பலகதைகள் இருக்கலாம். ஒளவையார் நோன்பு, வரலட்சுமி நோன்பு, சித்திர புத்திரன் நோன்பு ஏன் கொண்டாட வேண்டும்? இதில் ஒரு புனை கதை வரலாறும், நோன்பு நோற்றவர் அடைந்த நன்மை பற்றிய விவரங்களும் இருக்கும். அல்லது நோன்பு நோற்காதவர்கள் அடைந்த தீமை பற்றியும் இருக்கும். இவையாவும் சுதந்திரமான கதைகள். இலக்கியமும் புராணங்களும் வளர்ச்சி பெற்ற பின்னர், மனிதன் தனது சூழ்நிலை பற்றி அவற்றோடு தொடர்புகொண்ட கதைகளைப் படைத்துள்ளான்.