பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTS TmmmmYYO SASAASAASAASAASAASAAAS ● ● * ) ● ● * 巻 を படைத்தனர். அவனுக்கு முன்னரே இருளில் மூழ்கியிருந்த நீரினுள் மூழ்கிய உலகு இருந்தது. இவன் தனக்கு இயல்பான மந்திர சக்தியால் விலங்குகளைப் படைத்தான். படைக்கும் முன் வலியுண்டாகி வருந்தினான். - தென் அமெரிக்காவில் மறைந்து போய்விட்ட மாயா நாகரிகத்தில் மக்களுடைய போபல்வோ என்ற புராணத்தில் ஒரு படைப்புக்கதை உள்ளது. ஸ்பானியர்கள் அவர்களை கிறிஸ்தவ சமயத்தைத் தழுவச் செய்த காலத்தில் இந்நூலைக் கண்டுபிடித்து ஸ்பானிய மொழியில் பெயர்த்தெழுதினார்கள். அதற்கு முன் மாயா சித்திரவெழுத்தில் இந்நூல் இருந்தது. நூல் மிகவும் பழமையானது. "அனைத்தும் அமைதியாகவும் மெளனமாகவும் இருந்தன. பரந்த வெட்ட வெளிப் பரப்பில் சலனம் எதுவும் இல்லை. - அவர்கள் தோப்புகளையும், முந்திரித் தோட்டங்களையும் தோற்றுவிக்கவும் அதிகமாக்கவும் திட்டமிட்டார்கள். வானத்தில் ஹீரோதான் இருந்தார். தானிருப்பதை அவர் மின்னல் மூலமாகவும், மின்னல் ஒளி மூலமாகவும், இடி இடிப்பதன் மூலமாகவும் அறிவித்தார். இம்மூன்று செயல்களும் வானத்தின் இதயத்தில் நிகழ்ந்தன. பின் அவர்கள் 'டெப்பன் குகுமாட்ஸ் இடம் வந்தார்கள். நாகரிக வாழ்க்கையைத் தாங்கள் அமைத்துக் கொள்ள ஆலோசனை கேட்டார்கள். விதையை எப்படி உருவாக்குவது? ஒளியை எப்படி உண்டாக்குவது? நீரை எப்படிப் பெறுவது? நீர்தான் உயிரை வளர்க்கிறது “இப்படிச் செய்வோம். நீர் விலகட்டும். தரை தோன்றட்டும். நாம் விதை விதைப்போம். பகலின் ஒளி தரைமீது பாயட்டும். இவ்வளவும் இருந்தாலும் போதாது. அறிவுடைய மனிதர்கள் உலகில் வாழ வேண்டும்.” இதுவே உலகில் நடைபெற்ற முதல் உரையாடல். இவ்வுலகில் மனிதன் கூட வாழவில்லை.