பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. ు • • • • • • • • • • • • • • • • பழங்கதைகளும் பழமொழிகளும் போரினால் மாற்றப்படுகின்றன. புனைகதை படைத்தவர்களது பண்டைக்கால முன்னோர்களது செயல்களையே புராணத்தில் வானத்தந்தை, பூமித்தாய் ஆகியோரின் உறவாகவும், போராட்டமாகவும், குரோனஸ்வானத்தந்தை ஆகியோரின் பகை மையாகவும் குரோனஸின் கொடுஞ்செயலாகவும் புராணம் கூறுகிறது. மேலும் சிற்சில இடங்களில் உருமாறியதாயுரிமை, வெறும்வழிபாடாக வேறு நாடுகளில் நிலைப்பதை அப்ரோடைட் தோற்றமாகவும், வாரிசுரிமைப் போட்டியில் தந்தை, மகன் பகையை ஜீயுலை வானத்தந்தை விழுங்க முயலுவதாகவும், தந்தையுரிமையின் வெற்றி, அகரர் மீது தேவர்களது வெற்றியாகவும் கூறப்பட்டுள்ளது. மயோரி என்ற இனக்குழு மக்களின் படைப்புக் கதையைக் காண்போம். பாலின்ஷியத்தீவுகளில் வாழும் அவர்கள் பூமித்தாயிடமிருந்து, வானத்தந்தையின் கூட்டால் மக்களும் பிற உயிர்களும் பிறந்ததாக நம்புகிறார்கள். இக்கதை தோன்றிய காலம் புராதன விவசாயம் தோன்றி அதற்குப்பின் அறிவுடைய மக்கள் தோன்றியதைக் குறிப்பிடுகிறது. கதை வருமாறு: உலகப் பெருவெள்ளத்தின் மீது பூமித்தாயும், வானத்தந்தையும் கூடினர். உலகத்தில் உயிர் வாழ்க்கை தோன்றியது. மக்களும், விலங்குகளும் பூமித்தாயின் நான்கு கருப்பைகளில் உருவாயினர். பூமித்தாய்வானத்தந்தையைத் தன்னிடம் இருந்து விலக்கி விரட்டினாள். 'தாயின் முதல் குழந்தைக்குத் தீங்கு நேரும் என்ற நம்பிக்கையில் தாய், தந்தையிடம் தனது எண்ணற்ற குழந்தைகளைப் பற்றி ஆலோசனை செய்தாள். “நம்முடைய குழந்தைகள் பிறந்தவுடன் எப்படி உலகில் பல இடங்களை அறிவார்கள்? சூரியத் தந்தையின் வெள்ளை ஒளியில் கூட இவர்கள் இடங்களை அறிவது கடினமாக இருக்குமே” என்று பேசிக் கொண்டார்கள். பிறகு முகமூடிகளை அணிந்த கூத்தாடிகள், முகமூடிகள் மூலம் இன்னார் என்றறிவது போல இவர்களும் ஒருவரையொருவர் தெரிந்து கொள்வார்கள் என்று நினைத்தார்கள். இப்படியே இவன் மனிதன், இவள் மனுஷி என்று பிரித்தறிவார்கள் என்று எண்ணினார்கள்.