பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறைமுகத்திலிருந்து மீளகு கொண்டு போகப்பட்டபடி யால் ரிளருக்கு 'மரிசி' என்று பெயர் உண்டாயிற்று. முசிறி என்னும் பட்டினத்தின் பெயர் தான் மரிசி என்று மருவிற்று. உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப் பட்டினம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இடையில் வெள்ளப் பெருக்கினால் அழிந்து விட்டது. கி.பி. 1341 இல் பெய்த பெரு மழையின் காரணமாகப் பேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முசிறிப் பட்டினம் வெள்ளத்தில் மூழ்கி மறைந்து போயிற்று. அதனால் அதனையடுத்துட்ட புதிய காயல்களும் துருத்திகளும் (மணல் தீவு) ஏற்பட்டன. முசிறித் துறை முகம் முழுகிப்போனபடியால் அதற்கு அருகில் பிற்காலத்தில் கொச்சித் துறைமுகம் ஏற்பட்டது.

குறிப்பு: முசிறிப் பட்டினத்துக்கு முயிரிக்கோடு என்றும் மகோதை என்றும் மகோதைப் பட்டினம் என்றும் சங்க காலத்துக்குப் பிறகு பெயர் கூறப்பட்டது.

வைக்கரை

இது முசிறிக்குத் தெற்கேயிருந்த துறைமுகப் பட்டினம். கோட்டயத்துக்கு அருகிலே இருந்தது. இந்தத் துறை முகத்தைத் தாலமி என்பவர் பக்கரே (Bakarei) என்று கூறுகிறார். இந்தத் துறைமுகத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை.

மேல்கிந்த

தாலமி என்பவர் இதை மேல்கிந்த (Melkynda) என்றும், பெரிபுளூஸ் என்னும் நூல் நெல்சித்த என்றும், பிளைனி என்பவர் நியாசிந்த என்றும் கூறுகின்றனர். தமிழில் இதை என்ன பெயரிட்டுக் கூறினார்கள் என்பது தெரியவில்லை. இது வைக்கரைக்குத் தெற்கே இருந்தது. இதைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.

விழிஞம்

இலங்கொன் (Elankon) என்னும் துறைமுகப் பட்டினத்தைத் தாலமி என்னும் யவனர் கூறியுள்ளார்.

96