பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

137

கண்ணுளர் குடிஞை, கரந்து போக்கிடம் முதலியவை பொருத்தமாக அமைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறு தொடக்கத்தில் மனிதன் தனக்கு இன்றியமையாத் தேவையாய் இருந்த உறையுள் அமைத்தல் முதல் கோயில், அரண்மனை, கோட்டை, கொத்தளம், அரங்கு, கட்டட உள்ளலங்காரம் என இக்கலையின்கண் வளர்ந்த பின் அடுத்த வளர்ச்சியாய் அமைந்தது நகரமைப்பு.

பழந்தமிழர்கள் நகரமைப்பையும் அழகுறச் செய்தனர். திராவிடக் கட்டடக்கலை நாகரிகம் என்று அறிஞர் கண்டு பிடித்துள்ள சிந்துவெளி அகழ்வாய்வுச் சிதைவுகளில் உள்ள மொகஞ்சோதாரோ கோட்டை ஒன்று முப்பத்து மூன்று சதுர அடி முற்றத்தையும் அதனைச் சுற்றி அறைகளையும் உடையதாயுள்ளது. 230 அடி நீளமும் 78 அடி அகலமும் உள்ளதாயிருந்தது. அந்தக் கட்டடம் ‘ என்கிறார் அறிஞர் எஸ். இராமகிருஷ்ணன். 90 அடி கொண்ட மற்றோர் அவைக்கூடமாகும். மற்றொன்று தானியக் களஞ்சியமாகும். 48

நாகரிகத்தின் மலர்ச்சிக் காலமே, பழந்தமிழரிடமிருந்தே தொடங்குகிறது என்கிறார் ஆய்வாளர் க. தி. திருநாவுக்கரசு.

‘மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் கொண்ட நாடு நகரங்களை அமைத்து அவற்றைக் காக்க நல்ல தொரு அரசினை அமைத்து வாழ்வாங்கு வாழத் தொடங்கினான்’49 ‘ என்கிறார்.

கட்டடக் கலையின் உள்ளது சிறத்தலாய் ஊரமைப்பு நகரமைப்புக் கலை வளர்ந்தது. நகரமைப்புக் கலையிலும் தமிழர் தம் தனித் திறனைக் காட்டிப் பண்பாட்டு முத்திரையைப் பதிக்கலாயினர். பூம்புகார், மதுரை, உறையூர், காஞ்சி, வஞ்சி போன்ற நகரங்கள் பழந்தமிழர் நகரமைப்புத் திறனுக்குச் சான்றுகளாக இலங்கின.